பாஜக தேசிய செயலாளரும், கேரள மாநில பொறுப்பாளருமான எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவோம். கேரளா உள்ளாட்சி தேர்தலில் முன்புபெற்றிருந்த இடங்களை காட்டிலும் 3 மடங்கு அதிகம் பெற்றுள்ளது.
2016ம் ஆண்டு கேரளா சட்ட சபை தேர்தலில் பாஜக. தயவு இல்லாமல் யாரும் ஆட்சிஅமைக்க முடியாது. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் நிதிஷ் குமார்–லாலு பிரசாத்யாதவ் கூட்டணி என்பது தி.மு.க–அ.தி.மு.க கூட்டணி போல் உள்ளது.
இவர்களால் அந்தமாநில மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமுடியாது. நிதிஷ் குமார் கூட்டணி கடந்த தேர்தலிலும் பெற்ற வாக்குகளைவிட தற்போது குறைந்த வாக்குகள் மட்டும்தான் பெற்றுள்ளது. நிதிஷ் குமார் கூட்டணிகளுக் கிடையேயான மோதல் போக்கு பீகார் மக்களுக்கு எந்தபயனையும் தராது. தமிழ்நாட்டில் வர உள்ள 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.