மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மேகாலயா, நாகாலாந்து தேர்தல்குறித்து பாஜக செயலாளர் ரிதுராஜ் சின்ஹா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்தியஅரசு தாராளமாக நிதியுதவி வழங்கிவருகிறது. ஆனால் மாநில அரசுகள் திறம்பட செயல் படாததால் பல்வேறு திட்டங்களின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஊழல் விவகாரங்களால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தமக்கள், பிரதமர் நரேந்திரமோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதை முன்னிறுத்தி மேகாலயாவின் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். மோடியின் சக்தி என்பதை மையமாககொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். மீதமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணிகட்சிகள் போட்டியிடும். மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அபாரவெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணி அரசில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியை எதிர்த்து பாஜக களமிறங்குகிறது.
நாகாலாந்தில் முதல்வர் நெய்பியுரியோ தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்குகட்சி கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |