பிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சென்றடைந்தார். லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லண்டனுக்கு சென்றுள்ள மோடிக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் விருந்து அளிக்கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இவ்வாறு உரையாற்றுவது இதுவே முதன் முறை. நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்திசிலையை பார்வையிடுகிறார்.
லண்டனில் உள்ள பிரிட்டனின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான வெம்ப்ளியில் நாளை நடைபெறும் இந்திய வம்சா வளியினரின் கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூனும் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சுமார் 600 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவைப் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.