3 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்ற டைந்தார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு ஆசியன் -இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.
மலேசிய தலை நகர் கோலாலம் பூருக்கு தனிவிமானம் மூலம் சென்றடைந்த பிரதமர் மோடியை, மலேசியாவுக்கான இந்திய தூதர் டிஎச் திரு மூர்த்தி வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மிகப் பெரும் விளம்பர பலகைகள் கோலலம்பூர் நகர்முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளூர்மக்களும் புலம்பெயர்ந்த இந்தியர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
மோடி தங்கியுள்ள ரெனிஸ்ஸன்ஸ் ஓட்டல்வளாகத்தில் மோடியை சந்திக்க இந்திய வம்சாவளியினர் காத்திருக்கின்றனர். பிரதமர் ஓட்டலை விட்டு வெளியே றுகையில், அவரைபார்க்க ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் குழுமியிருந்தனர்.
கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் நாளை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதேபோல், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் நாளை உரையாற்றவுள்ளார். மலேசிய நாட்டு பிரதமர் நஜீப்ரசாக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது பாதுகாப்பு, ராணுவம் ஆகியதுறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பல்வேறு புரிந் துணர்வு ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்தாக உள்ளன.
இதனிடையே மலேசியாவில் நடைபெறும் 13வது ஆசியான் மாநாட்டை சீர்குலைப் பதற்காக, அங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கூறபடுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் மலேசியா வந்துள்ளதால் அங்கு தீவிரவாதிகள் தாக்குதல்நடத்த அதிகவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மலேசியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.