இந்தியா வந்துள்ள மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மூன்று நாள் அரசு முறைப்பயணமாக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் டில்லி வந்தார். இன்று( ஆக.,20) பிரதமர் மோடியை ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது இருதரப்பு , நட்புறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
பின்னர் இந்திய தொழிலாளர்கள் மலேசியா செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலை.யில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,
மேலும் அப்போது ஆசியான் மாநாட்டிற்கு மலேஷியா தலைமை தாங்குவற்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |