மீண்டும் தலைவரானார் அமித்ஷா-

இந்தியாவிலேயே ஒரு கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்றால் அது பிஜேபி தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி ஆரம்பிக்கபட்ட கட்சிக்கு இன்று வரை பத்து தலைவர்கள் இருந்துள்ளார்கள். தலைவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களின் பதவிக்காலம் அதிகரிக்கபட்டுள்ளது.

மூன்று வருடம் கொண்ட பிஜேபியின் தேசியதலைவர் பதவியை 2014ம் ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவரு க்கு ஒரு பதவி என்ற கொள்கையால் அன்றைய பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருந்து வெளியேற நாடாளு மன்ற தேர்தலில் பிஜேபியின் வெற்றிக்கு களம் வகுத்த அமித்ஷா
தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

தன்னுடைய முதல் பதவிகாலம் மூன்று ஆண்டுகளாக இல்லாத நிலையில் பதவிஏற்ற அமித்ஷா இரண்டாவதாக இன்று மீண்டும் தேர்வாகி உள்ளார். நிர்வாகத் திறமையிலும், களவியூகம் வகுப்ப திலும் வல்லவர் என்றறியப்படும் .அமித்ஷா அவர்களின் சாத னைக்கு ஒரு சின்ன உதாரணம்.இதோ..உத்தர பிரதேசத்தில் 2009 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த இடங்கள் பத்துதான். ஆனால் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பா ளராக 2013ம் ஆண்டில் அமித்ஷா பொறுபேற்ற பிறகு 2014 ல் நடந்த பொது தேர்தலில் பிஜேபிக்கு மட்டும் கிடைத்த தொகுதிகள் 71 தொகுதிகள்.மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பிஜேபி கூட்ட ணி 73 தொகுதிகளை கைப்பற்றியது.

அக்டோபர் 22, 1964ல் மும்பையில் குஜராத்தி வியாபாரஜெயின் குடும்பத்தில் பிறந்த அமித்ஷா தன்னுடைய 14 வயது வயதிலே யே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தவர், கல்லூரியில் உயிர் வேதியியல் மாணவரான அவருக்கு, 1982ல் அஹமதாபாத் ABVP மாணவரமைப்பின் செயலாளராக தேர்வானார்.

அடுத்து தன்னுடைய கடுமையான உழைப்பால் குஜராத் மாநில பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவில் வேலை செய்து தேசிய அளவில் பொருளாளராக உயர்ந்தவர் பின்னர் மோடியுடன் இணைந்து குஜராத்தில் கிராமம் கிராமமாக பிஜேபியை வளர்த்து அகமதாபாத் நகர பிஜேபியின் செயலாளர் ஆனார். அடுத்து குஜராத்மாநில பிஜேபி துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி திவாலாக இருந்த பொழுது வங்கியின் சேர்மனாக பொறுப்பேற்று ரூ.20.28 கோடி நஷ்டத்தில் இருந்த. வங்கியை ஒரே ஆண்டில், கடன்களை அடைத்து, லாபம் ஈட்ட வைத்தார்.

1995ம் ஆண்டு, அமித்ஷா அவர்கள், சர்கெஜ் சட்டசபை தொகுதி உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அமித்ஷா ஒவ்வொரு முறையும் லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் எதிராளியை வீழ்த்துவதே இவரின்
குறிக்கோளாக இருக்கும். மோடியின் தலைமையில் குஜராத் மாநிலத்தில் உள்துறை மந்திரியாக பதவி வகித்து குஜராத் மாநிலத்தில் அமைதியை கொண்டு வந்தார்.

இன்று மீண்டும் தேசிய தலைவராக பொறுப்பேற்கும் அமித்ஷா மோடி பிரதமராக இருக்கும் 2019 வரை தலைவராக இருந்து கட்சியை சிறப்பாக வழி நடத்தி சென்று அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் பிஜேபிக்கு வெற்றி தேடி தருவார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...