டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு கடந்த, பிப்.,5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 70 இடங்களில், 48 இடங்களில் வென்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. இதன் வாயிலாக, 27 ஆண்டுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், டில்லி ராம் லீலா மைதானத்தில் இன்று (பிப்.,20) பதவியேற்பு விழா நடந்தது. டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இவருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் டில்லியின் 4வது பெண் முதல்வர் ஆனார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா துணை முதல்வராக பதவியேற்றார். ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.
* ஹரியானாவில் பணியா சமூகத்தைச் சேர்ந்தவர் ரேகா குப்தா. இவருக்கு வயது 50. தற்போது டில்லி பா.ஜ.,வின் பொதுச் செயலராக உள்ளார்.
* பா.ஜ.,வின் மகளிர் பிரிவு தேசிய துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில், ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து, 29,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
* சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு, வென்று, முதல்வராக உள்ளார். வழக்கறிஞரான இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி.,யில் தன் அரசியல் பயணத்தை துவக்கினார்.
* கடந்த, 1997 – 1997ல் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவரானார். உத்தரி பீதம்புராவில் இருந்து, கவுன்சிலராக, 2007 மற்றும் 2012ல் தேர்வானார். தெற்கு டில்லி மாநகராட்சி மேயராகவும் இருந்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |