பிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கேரளாவில் இருந்து தனிவிமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ. மருத்துவ கல்லூரியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரி சவுத்ரி தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று கோவைவந்தனர். அவர்கள் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தனர்.

பொதுக்கூட்ட மைதானம் நேற்று முதலே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ‘சீல்’ வைக்கப் பட்டது. அங்கு செல்ல யாரையும் அனுமதிக்க வில்லை. இதுபோல, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. கோவை, சேலம், திருப்பூர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த பகுதிகளில் பாதுகாப்புபணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரிகள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து கின்றனர்.

இதில் திறப்புவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் பிரதமர் வந்துசெல்லும் இடங்களில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...