மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் நிகழ்வில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார். அன்றைய தினம் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்விற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரதமர் மோடியின் பாதுகாப்பை பெண் போலீசார் உறுதி செய்வார்கள். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைப் பற்றி குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக, வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிபேடிற்கு பிரதமரின் வருகையிலிருந்து, மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெறும் இடம் வரை அவரது பாதுகாப்பிற்கு பெண் போலீசார் மட்டுமே பொறுப்பாவார்கள்’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...