விவசாயிகளின் இன்னலுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் ஒன்றே தீர்வு

இந்த உரையை நாட்டு மக்களுக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்  மான் கீ பாத் நிகழ்ச்சியை கைப்பேசிகளிலும் கேட்கும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. 81908 81908 என்ற எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுப்பதன் மூலம் நிகழ்ச்சியை கேட்கலாம்.

இளைஞர்கள் மத்தியில் கதர் ஆடைகள் நாகரிகத்தின் அடையாள சின்னமாக இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது. கதர்துணியை அதிகளவில் மக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும். இதன் மூலம் அபரிமிதமான வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும். இந்ததுறைக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அவசியம். தற்போது சூரிய ஒளி சக்தி மூலம் விசைத் தறிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் விவசாயிகள் என்னும் பெயரில் ஏதேதோ கூறுகின்றனர். அந்த விவாதத்துக்குள் செல்ல நான் விரும்ப வில்லை. ஆனால் இயற்கை சீரழிவுகளின் போது விவசாயிகள் பெரும்நெருக்கடியை சந்திக்கின்றனர். அவர்களை மனதில்கொண்டு வரப்பட்டதுதான் பிரதமர் பயிர்க்காப்பீட்டு திட்டம்.

இத்திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும்வகையில் விரிவு படுத்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 50 சதவீத விவசாயிகளை இதில் இணைக்க நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நாட்கள் வரையிலான பயிர்கள் பாதிக்கப்பட்டால்கூட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. இன்னலுக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் மட்டுமே தீர்வு அளிப்பதாக இருக்கும்.

மத்திய அரசு தொடங்கிவைத்துள்ள தொடங்கிடு இந்தியா திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. லட்சக் கணக்கானவர்கள் இதில் தங்களை பதிவுசெய்து கொண்டு இருக்கின்றனர். ஏராளமானோர் இணையதளம் வாயிலாகவும் தொடர்புகொண்டு உள்ளனர்.

2016–ம் ஆண்டுக்கான தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் விளை யாட்டுப் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கிறது. இதேபோல் விசாகப் பட்டினத்தில் வருகிற 5–ந் தேதி முதல் 8–ந்தேதி வரை நடைபெறும் சர்வதேச கப்பற்படை கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படையின் வலிமை வெளிப்படுத்தப்படும்.

இதில் 50 நாடுகள் கலந்துகொள்வதாக உறுதி அளித்து இருக்கின்றன. இந்த கூட்டுபயிற்சி உலகின் ராணுவ பலத்துடன் நமது ராணுவ பலமும் ஒத்துழைத்து செயல்படுவதை மேம்படுத்துவதாக அமையும்.

அரியானா, குஜராத் மாநில கிராமங்களில் குடும்பத்தில் படித்த மூத்தபெண்கள் தேசியக் கொடியை ஏற்றி வித்தியாசமான முறையில் குடியரசு தினத்தை கொண்டாடினர். பெண் குழந்தைகளை போற்றுவோம், பெண் குழந்தைகளை படிக்கவைப்போம் என்னும் முழக்கத்தை போற்றும்விதமாக இந்த மாநில அரசுகள் நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய்மை இந்தியா திட்டம் வேகம்பிடித்து வருகிறது. இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் தங்களின் பிரசாரத்தை ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் மேற்கொண்டு வருவது திருப்திகரமாக உள்ளது. இதேபோல் தேசத்தலைவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளை சுத்தம்செய்ய மக்கள் முன்வரவேண்டும்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’(மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். நேற்று அவர் ஆற்றிய உரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...