முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 25ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதில் முக்கியமானது இயற்கை வேளாண்மைக்கான தேசியஇயக்கம். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்ததிட்டம் செயல்படுத்தபடும். இந்த திட்டத்திற்காக 2481 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய இந்ததிட்டம் உதவும்.

பான் 2.0: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தரகணக்கு எண் எனப்படும் பான் எண்ணை பொதுவணிக அடையாள காட்டியாக மாற்ற வசதியாக பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 1435 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

ஒரே நாடு ஒரேசந்தா: நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்காக ஒரே நாடு ஒரே சந்தா என்ற திட்டம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த திட்டத்திற்கு 6000 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 6300-க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வு கட்டுரைகளை எளிதாக அணுக முடியும்.

அடல் கண்டுபிடிப்பு இயக்கம்: நிதிஆயோக் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட அடல் கண்டுபிடிப்பு இயக்கம் தொடரும் என தெரிவிக்கபட்டுள்ளது. 2028 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் இதற்காக 2750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ரயில் திட்டங்கள்: 7,927 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ரயில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பயன்தரும் வகையில் இந்த மூன்று ரயில் திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளன.

நீர்மின் திட்டங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் 3,689 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நீர்மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...