இந்தியாவின் எல்லையான சியாச்சின் பனிமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 6 நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரரைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடியும், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங்கும் ராணுவ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு இன்று மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுஹந்தப்பா கோப்பாட் உடனடியாக விமானம் மூலம் தில்லி கொண்டு வரப்பட்டு, புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், மருத்துவமனைக்கு வந்த மோடியும், ராணுவ தளபதி தல்பீர் சிங்கும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடம், ராணுவ வீரரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
பிப்ரவரி 3ம் தேதி சியாச்சின் மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 6 நாட்களாக பனிச்சரிவில் சிக்கியிருந்த வீரரை இன்று மீட்புப் படையினர் உயிரோடு மீட்டது மிகுந்த ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.