பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆகஸ்ட் 15 அன்று தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து 78 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். நினைவுச் சின்னத்தின் கொத்தளத்திலிருந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘வளர்ச்சியடைநத பாரதம் @ 2047′. 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதலாக இந்த கொண்டாட்டங்கள் திகழும்.
சிறப்பு விருந்தினர்கள்
நாட்டின் உற்சாகமான இந்த பண்டிகையில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு செங்கோட்டையில் கொண்டாட்டங்களைக் காண சுமார் 6,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பழங்குடியின சமூகம், விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் என வகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த மக்கள், பல்வேறு அரசாங்க திட்டங்கள் / முயற்சிகளின் உதவியுடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
அடல் புதுமை இயக்கம் மற்றும் பிஎம் ஸ்ரீ (எழுச்சி இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தின் மூலம் பயனடையும் மாணவர்கள், மேரா யுவ பாரத் (எனது பாரத்) மற்றும் ‘ என் மண் என்தேசம் திட்டத்தின் கீழ் தேசிய சேவைத் திட்டத்தின் தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். விருந்தினர்களில் பழங்குடி கைவினைஞர்கள் / வன செல்வ வளர்ச்சி உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஷெட்யூல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் நிதியளிக்கப்பட்ட பழங்குடி தொழில்முனைவோர்; மற்றும் பிரதம விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் வேளாண் உற்பத்தி மையங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர், துணை செவிலியர் மருத்துவச்சி (ANM) & அங்கன்வாடி தொழிலாளர்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்; சங்கல்ப்பின் பயனாளிகள்: பெண்களுககு அதிகாரமளித்தல் மையம், லட்சாதிபதி மகளிர் மற்றும் ட்ரோன் மகளிர் முயற்சிகள் மற்றும் சகி கேந்திரா திட்டம்; குழந்தைகள் நலப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினருக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னோடி வட்டங்கள், திட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் ஒரு விருந்தினர்; எல்லைச் சாலைகள் அமைப்பின் தொழிலாளர்கள்; பிரேரானா பள்ளி திட்ட மாணவர்கள்; மற்றும் முன்னுரிமைத் துறை திட்டங்களில் செறிவூட்டப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
இந்த பிரமாண்டமான விழாவைக் காண பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் பாரம்பரிய உடையில் அழைக்கப்பட்டுள்ளனர். மைகவ் மற்றும் ஆகாஷ்வாணிஆகியவற்றுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு ஆன்லைன் போட்டிகளில் வெற்றி பெற்ற மூவாயிரம் (3,000) வெற்றியாளர்களும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
செங்கோட்டைக்கு வரும் பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத், பாதுகாப்புச் செயலர் திரு. கிரிதர் அரமணே ஆகியோர் வரவேற்க உள்ளனர். தில்லி பகுதி ஜெனரல் கமாண்டிங் அதிகாரி,லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமாரை பாதுகாப்புச் செயலாளர் பிரதமருக்கு அறிமுகப்படுத்துவார்.
பின்னர் தில்லி பகுதி ஜெனரல் கமாண்டிங் அதிகாரி திரு. நரேந்திர மோடியை அணிவகுப்பு மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முப்படை மற்றும் தில்லி காவல் படை இணைந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தும். அதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை பிரதமர் பார்வையிடுவார்.
பிரதமருக்கான அணிவகுப்பு மரியாதை குழுவில் இராணுவம், கடற்படை , விமானப்படை மற்றும் தில்லி காவல்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 24 வீரர்கள் இடம் பெறுவர். இந்திய கடற்படை இந்த ஆண்டு ஒருங்கிணைப்பு சேவையை மேற்கொள்கிறது. கமாண்டர் அருண் குமார் மேத்தா இந்த அணிக்கு தலைமை தாங்குவார் . பிரதமரின் பாதுகாப்பு படையில் உள்ள ராணுவ படைக்கு மேஜர் அர்ஜுன் சிங் தலைமை தாங்குவார், கடற்படை படைக்கு லெப்டினன்ட் கமாண்டர் குலியா பவேஷ் என்.கே மற்றும் விமானப்படை படைப்பிரிவுக்கு ஸ்குவாட்ரன் லீடர் அக்ஷரா யூனியல் தலைமை தாங்குவார். தில்லி காவல் துறை படைக்கு கூடுதல் டி.சி.பி அனுராக் திவேதி தலைமை தாங்குவார் .
அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின்னர், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்கு செல்கிறார், அங்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் அவரை வரவேற்க உள்ளனர். தில்லி பொது கமாண்டிங் அதிகாரி கொடியை ஏற்றுவதற்காக பிரதமரை மேடைக்கு அழைத்துச் செல்வார்.
லெப்டினன்ட் சஞ்சீத் சைனி தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார். இது 1721 படைப்பிரிவின் இன் துணிச்சலான வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகளை வெடித்தும் வணக்கம் செலுத்துவர். உள்நாட்டு 105 மிமீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் இந்த பிரிவுக்கு மேஜர் சப்னிஸ் கௌசிக் மற்றும் துப்பாக்கி நிலை அதிகாரியாக நைப் சுபேதார் (ஏஐஜி) அனுதோஷ் சர்க்கார் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 32 பிற அணிகள் மற்றும் தில்லி காவல்துறையின் 128 பேரைக் கொண்ட அணி பிரதமரால் தேசியக் கொடியை ஏற்றும் நேரத்தில் வணக்கம் செலுத்தும். இந்த ஒருங்கிணைந்த சேவை மற்றும் காவல் துறை பிரிவுக்கு வினய் துபே தலைமை தாங்குவார் .
தேசிய கொடி ஒரு மரியாதை அளிக்கும் இராணுவ படைப்பிரிவுக்கு மேஜர் தினேஷ் நாங்கோம், கடற்படை படைக்கு லெப்டினன்ட் கமாண்டர் சச்சின் தன்கர் மற்றும் விமானப்படை படைப்பிரிவுக்கு ஸ்குவாட்ரன் லீடர் சி.எஸ்.ஷ்ரவன் தேவய்யா தலைமை தாங்குவார். தில்லி காவல் துறை படைக்குகாவல் துறை கூடுதல் துணை ஆணையர் அச்சின் கார்க் தலைமை தாங்குவார் .
கொடி ஏற்றப்பட்ட பிறகு, மூவர்ணக் கொடிக்கு ‘தேசியவணக்கம்’ செலுத்தப்படும். ஒரு ஜே.சி.ஓ மற்றும் 25 பிற பிரிவுகளைக் கொண்ட பஞ்சாப் ரெஜிமென்ட் இராணுவ இசைக்குழு தேசிய கொடியை ஏற்றி ‘வணக்கம் செலுத்தும்’ வழங்கும் போது தேசிய கீதம் இசைக்கும். இந்த இசைக்குழுவை சுபேதார் மேஜர் ராஜிந்தர் சிங் வழி நடத்துகிறார்.
பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப் படையின் இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் துருவ் மூல, விழா நடைபெறும் இடத்தில் மலர் தூவப்படும். ஹெலிகாப்டர்களின் கேப்டன்களாக விங் கமாண்டர் அம்பர் அகர்வால் மற்றும் விங் கமாண்டர் ராகுல் நைன்வால் இருப்பார்கள்.
மலர் தூவிய பின்னர், பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி) கேடட்கள் தேசிய கீதத்தை பாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,000 சிறுவர் மற்றும் சிறுமி கேடட்கள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இந்த கேடட்கள் கொத்தளத்திற்கு எதிரே உள்ள கியான்பாத்தில் அமர வைக்கப்படுவார்கள். அவர்கள் மூவர்ண உபகரணங்களுடன் ‘எனது இந்தியா’ சின்னத்தை உருவாக்குவார்கள். மொத்தம் 500 நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |