மத்திய அமைச்சர்கள், தங்களது துறைசார்ந்த திட்ட பணிகளை குறித்த கால கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, ''அரசு அறிவிக்கும் திட்டங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அதிகப் படுத்துகின்றன. மேலும், அந்த திட்டங்களின் பலன்கள் என்ன என்பதை பொது மக்கள் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர்.
பொது மக்களின் எதிர் பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டுமென்றால் காலக்கெடுவை நாம் தவறவிடக்கூடாது. அதனால், எந்தவொரு திட்டத்தையும் குறித்த காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மிக முக்கியமானவை. அந்தத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் கிடப்பில் போட்டுவிடக்கூடாது" என்றார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.