இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) கொண்டாடப்பட உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இந்த ஆண்டின் விழாவை நடத்துகிறது. சி.எஸ்.ஐ.ஆர்-ன் ஓர் உறுப்பு ஆய்வகமான தேசிய பல்துறை அறிவியல் தொழில்நுட்பக் கல்விக்கழகம் (திருவனந்தபுரம்) முழு விழாவையும் ஒருங்கிணைக்கிறது. அறிவியல் மற்றும் சமுதாய ஈடுபாட்டின் தனித்துவ திருவிழாவான இந்திய சர்வதேச அறிவியல் விழா 2015-ம் ஆண்டு முதன் முதலாக நடத்தப்பட்டது. முதலாவது விழா தில்லி ஐஐடியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய அறிவியல் இயக்கமான விஞ்ஞான பாரதி இந்த அறிவியல் விழாவை நடத்தியது. வடகிழக்கு இந்தியாவில் முதல் முறையாக இந்த விழா இப்போது நடைபெறவுள்ளது. அறிவியல் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், இளம் மனங்களை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் அணுகுமுறைகள் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் நடத்தப்படும் இதில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்
10 வது ஆண்டு அறிவியல் விழாவின் கருப்பொருள் “அறிவியல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுதல்” என்பதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தொழில்துறை வளர்ச்சியுடன் ஒன்றிணைத்து, இந்தியாவை உற்பத்தியில் உலகளாவிய தலைமையிடமாக மாற்றுவதற்கான அரசின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துறைகளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை , அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் , உயிரி தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இந்த வருடாந்தர நிகழ்வை நடத்துவதற்கு பொறுப்பானவையுகும்.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், விண்வெளித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பல அமைச்சகங்கள், அவற்றின் துறைகள், கவுன்சில்கள் மற்றும் அமைப்புகள் இந்த விழாவில் பங்கேற்கின்றன
இந்த விழா, தொடக்கத்தில் ஒரு சிறப்பு நிகழ்வைக் கொண்டுள்ளது. சந்திரயான் இயக்கத்தில் இந்தியாவின் வெற்றியைக் காண்பிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் “சந்திரயான் – சந்திரனின் அருங்காட்சியகம்” என்ற பிரிட்டிஷ் கலைஞர் டாக்டர் லூக் ஜெர்ராமின் கலை மாதிரி பங்கேற்பாளர்களிடையே வைக்கப்படும். இந்த மாதிரியானது சுமார் ஏழு மீட்டர் விட்டம் கொண்ட சந்திரனின் பிரதியாகும். ஆகஸ்ட் 23, 2023 அன்று சந்திரயான் தரையிறங்கிய சந்திர மேற்பரப்பின் உண்மையான தோற்றம் போன்ற படங்களை இது காண்பிக்கும்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் வெற்றிக் கதைகளை காட்சிப்படுத்தும் வகையில் இந்த மெகா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள இந்திய அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கவும் அவை குறித்து கற்பிக்கவும் திருவிழாவின் நான்கு நாட்களும் பயன்படுத்தப்படும்.
இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி என்ற நிகழ்வு இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுவதற்குத் தேவையான விஷயங்களைப் பற்றி விவாதிக்க உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாணவர் அறிவியல் கிராமம் என்று முன்னர் அழைக்கப்பட்ட புதிய நாளந்தா, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும். கண்காட்சிகள், செயல்முறை விளக்கங்கள், கல்வி விளையாட்டுகள் மற்றும் சவால்கள் மூலம் அறிவியல் -தொழில்நுட்பம் – பொறியியல்மீதான மாணவர்களி, கணிதம்ஆகியவற்றின்மீது ஆர்வத்தைத் தூண்டுவதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரக்யா பாரத் நிகழ்ச்சி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றத் தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய எல்லைகள் குறித்து விவாதிக்கும். செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, ரோபோக்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு அறிவியல் துறைகளில் அதிநவீன ஆராய்ச்சியை ஊக்குவிப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாரி சக்தி நிகழ்வு அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கும்.
அறிவியல் தொழில்நுட்ப ஹேக்கத்தான் நிகழ்வு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புதுமையான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளைக் கொண்ட அணிகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும், மேலும் வெற்றியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும். இறுதி சுற்று பங்கேற்பாளர்களுக்கு உள்ளகப்பயிற்சி போன்ற சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த 45 வயதுக்குட்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைப்பதை இளம் விஞ்ஞானிகள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் அறிவியல் கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி வாய்ப்புகள் உட்பட இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இளம் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ள இது உதவும்.
சிந்தனைத் தலைவர்களின் வட்டமேஜை மாநாடு மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில்கள், தொழில் துறை தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒரே மேடையில் கொண்டு வரும்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |