திமுக, பாஜக, தேமுதிக கூட்டணியை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.
பாஜக தமிழக கட்சியல்ல. ஒரு தலைவரை நம்பி உள்ள கட்சி அல்ல. திமுக, பாஜக , தேமுதிக கூட்டணியை குலாம் நபி ஆசாத் தடுத்து விட்டார். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின் வெற்றி நிச்சயமாகி யிருக்கும்'.
முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘திமுக ஸ்டாலினை முதலமைச்சராக களமிறக்கி, பாஜக.,வுடன் கூட்டணி அமைத்தால் திமுக.,வின் வெற்றி உறுதி' என தெரிவித்திருந்தார் சுப்பிரமணிய சாமி. ஆனால், இதற்கு பதில்தரும் விதமாக திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி தான் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.