மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுங்கள், ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை

நேற்று கோவையில் திமுகவின் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலவர் ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்.. “தி.மு.க தனது நிர்வாக தோல்விகளை மறைத்து, மாநிலமக்களுக்கு எந்த அக்கறையும் இல்லாத விஷயங்களைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டத்தில் நேற்று, இந்தியா  கூட்டணி காட்சிகளை போல முதலவர் ஸ்டாலின் அவர்களும் பாஜக மீது “தார்மீக வெற்றி” பெற்றுள்ளதாக பேசியுள்ளார்.

மோடியின் வாழ்க்கையைப் பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதையைப் பற்றியும் தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமை. ஆனால் இந்தியா கூட்டணிக்கு அரசியல் சாசனம் என்பது எப்பொழுது எங்கு ஆட்சியில் இருந்தாலும் மிதிக்கக் கூடிய ஒரு துண்டு காகிதமே தவிர வேறில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர் அங்கம் வகிக்கும் இந்தியா  கூட்டணி, நாடு முழுவதும் உள்ள சந்தர்ப்பவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டமைப்பாகும். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு இந்தத் தேர்தலில் பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கையை இன்னும் தாண்ட முடியவில்லை. ஐ.என்.டி.ஐ கூட்டணியில் குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யை வைத்திருக்கும் 13 கட்சிகளும் மொத்தம் 232 இடங்களைக் கொண்டிருக்கின்றன, இன்னும் எங்கள் தனிக் கட்சியைக் கடக்க முடியவில்லை” என்றார் அண்ணாமலை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...