வடமாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா வுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

குஜராத் கடல்பகுதியில் இருந்த மர்ம படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதில் வந்த தீவிரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர் குஜராத் எல்லை வழியாக ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தீவிரவாதிகள் டெல்லியிலோ அல்லது சிவராத்திரியை முன்னிட்டு சிவன்கோயில்களிலோ தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 120 கமாண்டோ குழுவினர் குஜராத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். முன் எப்போதும் இல்லா வகையில் குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவராத்திரி கொண்டாடப் படுவதால் சிவன் கோயில்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் உயர் நிலைக்குழு கூட்டத்தைக்கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதுபோல, டெல்லி முழுவதும் உச்சகட்டபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேகப்படும்படியான நபர்களை கண் காணிக்குமாறு அனைத்து துணை ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. தீவிரவாத தாக்குதலை தடுத்துநிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தகூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தாக்குதலை எதிர்கொள்வதற்காக குஜராத்மாநிலத்தில் தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) 4 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் எடுத்துரைக்கபட்டது. தேவைப்பட்டால் வேறு பகுதிகளுக்கும் செல்ல அவர்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், மாநகரங்கள், வழிபாட்டுதலங்கள், தொழிற்சாலை பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...