பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை அறிக்கை வாயிலாக மசூத் அசார் ஒப்புக்கொண்டுள்ளான்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வீடு தரைமட்டமானது. அவனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தனது குடும்பத்தில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர் என பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை வாயிலாக ஒப்புக்கொண்டுள்ளான்.

* ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன் இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகளை செய்துள்ளான்.

* லஷ்கர் இ தொய்பா ஹபீஸ் சயீத் போல மசூத் அசாரும் இந்தியா தேடும் முக்கிய பயங்கரவாதி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடன் அவன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

* இந்திய உளவுத்துறை தொடர்ச்சியாக மசூத் அசார் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

* கடந்த 2001ல் நம் பார்லிமென்ட் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008ல் நடந்த மும்பை தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீ ...

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போரால் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் – மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் மேற்காசியாவில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபத ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அ ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல்லது பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம்” – பிரதமர் மோடி குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்- தொடக்கி வைத்த மோடி டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, ...

ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வக ...

ஆதரவளிக்கும்  பிரதமரின் விஸ்வகர்மா திட்டங்கள் உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...