உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் எந்திரத்தனமான இலகு வாழ்க்கையை நோக்கி பெரும்பான்மையான முன்னேறிய நாடுகளிலுள்ள மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். பின்தங்கிய நாடுகளிலுள்ள மக்களுக்கோ சரியான சத்துணவின்றி ஆண்டுகளைக் கடத்த வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை இரண்டுமே 'எலும்புநைவைக் (OSTEOPOROSIS) கொண்டுவரும் காரணிகளாக திகழ்கின்றன.
இன்று உலகிலுள்ள வயது முதிர்ந்தோர்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே இருக்கின்ற ஒரு பொதுவான எலும்பு நோய் இந்த 'எலும்பு நைவு' என்பது. இவர்கள் அனைவருமே முதுகுவலியால் தொடர்ந்து துன்பப்படுபவர்கள்தாம். பலருக்கு முதுகு கூன் விழுந்திருக்கும். அல்லது கால்கள் வளைந்திருக்கும் சிலர் நடக்கூட கடினப்படுவர்.
சரிவர சத்துணவு கிடைக்காத ஏழை மக்கள் – புரதக்குறைவு, உயிர்ச்சத்துக் குறைவு போன்றவற்றால் பல்லாண்டுகலாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எலும்பு வளர்ச்சியும், எலும்பு பலமும் சிறு வயது முதற்கொண்டே குறைவாக இருக்கும். உடலின் உயரமும், பருமனும் கூடக்கூட தமது உடம்பையே தூக்கிக் கொண்டு நடக்கவும் வலு இல்லாமல் இவர்களது எலும்புகள் நைந்து போகக்கூடும்.
அதிகமாக ஆடி ஓடி வேலை செய்யும் இளைஞர்களுக்கும், விளையாட்டு தடகள வீரர்களுக்கும் தசைகளும், எலும்புகளும் உறுதியடைந்து 'எலும்படர்த்தி உச்சம்' தொடும். இவர்களுக்குப் பிற்காலத்தில் எலும்பு நைவு நோயே வராமல் போகலாம். ஆனால், வயது முதிர்ந்தவர்கள் அளவுக்கதிகமான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால், அவர்களுக்கு ஏற்கனவே எலும்பு நைவு இருந்தால் அது அதிகமாகும்.
எலும்பு நைவு ஏன் ஏற்படுகிறது?
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' எலும்பு வளர்ச்சியிலும் உண்டு. எலும்பின் பழைய பகுதிகள் தேய்வடைந்து கரைந்து போதலும் இதற்குப் பதிலாக புதிய எலும்பு பகுதிகள் வளர்ந்து வருதலும் அன்றாடம் இயற்கையாகவே நிகழும். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே இயல்பாகவே ஒரு சமநிலை இருக்கும்.
எலும்பு நைவு நோயில் புதிய எலும்பு வளர்தல் குறைவாகவும், பழைய எலும்பு கழிதல் மிக அதிகமாகவும் நடக்கும். இதனால் சமமின்மை ஏற்படும். எலும்பின் அடர்த்தி படிப்படியாக குறைந்து எலும்புகள் உடையும். இதற்கு ஆங்கிலத்தில் 'ஆஷ்டியோபொரோசிஷ்' என்று பெயர்.
எலும்பு நைவு நோய் வரக் காரணிகள்
இயற்கையில் உறுதியான எலும்புகளும், பற்களும் வளர்வதற்குக் கால்சியம் சத்து தேவை. இளமைப் பருவங்களில் உடலுக்குத் தேவையான கால்சியத்தை உடலே இடைவிடாத உழைப்பினால் உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் உண்டு. ஆனாலும் கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள் உட்கொள்ளுதலும் மிகத் தேவை.
சில வேளைகளில் தேவையான கால்சியம் உணவில் இருந்தபோதும் கூட, சில இரப்பை மற்றும் குடல் சார்ந்த கோளாறுகளால் இந்தக் கால்சியம் சத்து சரிவர உணவிலிருந்து உடலுக்குள் உறிஞ்சப்படாமலே போகலாம். மலத்தில் அதிகப்படியான கால்சியம் வெளியேறலாம்.
மாதவிடாய் நின்றபிறகு, 3இல் 1 பெண்ணுக்கு இந்த எலும்பு நைவு நோய் வருவதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. அவர்களது உடலில் சுரக்கும் 'ஈஷ்ட்ரோஜன்' என்ற இயக்குநீரின்(Harmone) அளவு குறைவதே இதற்குக் காரணம்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.