இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை

சென்னையை அடுத்து உள்ள புழல் மற்றும் கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை பாராளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினரும், பா.ஜ.க  எம்.பி.யுமான தருண் விஜயை சென்னை தியாகராயநகரில் சந்தித்து பேசினர்.

அப்போது அவரிடம், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக வாழும் தங்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை வழங்கவேண்டும், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்தனர்.

இதையடுத்து தருண் விஜய் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாக கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு எடுத்துச்சென்று உரியநடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் வலுக் கட்டாயமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய பின்னர் விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப் படுவார்கள். எந்தவித சிரமும் இன்றி அகதிகள் வேலை வாய்ப்பு பெறும்வகையில் எளிதாக்கப்படும்.

முகாம்களில் உள்ள அகதிகள் மனிதாபி மானத்துடன் நடத்தப்படவேண்டும். அதைமீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமங்கலம் அகதிகள் முகாம் சம்பவம் போன்று இனி மேல் நடக்காமல் இருக்க அதிகாரிகளை எச்சரிக்கிறேன். முகாம்களில் வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளிக்கிறேன்.

திருச்சி அகதிகள் முகாமில் உள்ள தயன் ராஜ் விவகாரத்தில், அவருடைய வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படா வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. 60 ஆண்டுகாலம் ஆட்சிசெய்த காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...