கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

 பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு வரும் கல்லீரல் நோயாகும். இதற்கென நமது நாட்டுப்புறங்களில் பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்ட போதிலும் இதற்கென தனிப்பட்ட மருந்துகள் இல்லை. இவர்கள் தருகின்ற எந்த மருந்தும் வைரஸ் கிருமிகளைக் கொள்ளுவது இல்லை. இவர்களுக்குப் பல்வேறு உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் மிகவும் அவசியமானதாகும் இதன் மூலமும், நல்ல ஓய்வின் மூலமாகவும் இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியும்.

தவிர்க்க வேண்டியவை
கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் "மது" அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று கல்லீரலைப் பாதிக்கும் பிற மாத்திரை, மருந்துகளையும் சாப்பிடக்கூடாது.

புரோட்டீன் மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்ல பயனைத் தரும். அதிகமாக எடுத்துக் கொள்ளும் புரோட்டீன் உடலில் கிரகிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை உடலில் சேரும்; அவை இரத்தத்தில் அதிகமாகின்ற போது இதனால், மயக்கம் ஏற்பட்டு சுயநினைவே கூட இழக்க நேரிடும். தினமும் 60 முதல் 80 கிராம் வரை புரோட்டீனின் அளவைக் குறைத்திடுவது நல்லது.

தினமும் கொழுப்பு உணவின் அளவை 30 கிராம் வீதம் இவர்கள் உட்கொள்ளலாம்.

இவர்கள் அதிக அளவு கார்-போ-ஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ண அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஏனெனில், உடலுக்குத் தேவையான 'கலோரி' இதன் மூலமே பெருமளவு கிடைக்கிறது.

கார்போ-ஹைட்ரேட் அதிக அளவு உண்பதால்… உடலிலுள்ள புரோட்டீன் சிதைவது தடுக்கப்படும்.

சிலருக்கு வாந்தி, குமட்டல் ஆகியவை இருக்குமாயின் இரத்தக் குழாய் வழியாகக் குளுக்கோஸ் செலுத்தப்படும்.

இவர்களுக்கு 2000 கலோரிகள் தேவைப்படும். அதிகமான பாதிப்புக்கு உள்ளான மஞ்சட்காமாலை மிக்கவர்களுக்கு 1600 கலோரியே போதுமானது. மேலும் இவர்களுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவைத் தருவது வைட்டமின் 'பி' வகைகளையும், வைட்டமின் 'சி' இணையும் தரவேண்டும். போதுமான அளவு "சோடியம் குளோரைடு" மற்றும் 'பொட்டாஷியம் குளோரைடு" போன்றவற்றைத் தந்து உடலில் தாது உப்புகளின் அளவைச் சீராக வைத்திருக்க வேண்டும்.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...