1. உன் கடமைகளை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக நினைத்துச் செய்.
2. சடகோபனும் மற்ற ஆழ்வார் அடியார்களும் இயற்றிய புனிதமான நூல்களைப் படி. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை, தகுந்த சீடர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குக் கற்றுக் கொடு.
3. உனது நேரத்தை இறைவனுக்குத் தொண்டு செய்வதில் செலவிடு. (ஏழைகளுக்கு உணவளித்தல், இறைவன் வழிபாட்டிற்குத் தேவையான பொருள்களை அளித்தல், கோயிலில் விளக்கேற்றுதல், இறைவனுக்கு அழகிய மாலைகளைத் தொடுத்தல், கோயிலைச் சுத்தம் செய்தல், அழகாகக் கோலமிட்டு அலங்கரித்தல் போன்றவை.)
4. அறிவும் பக்தியும் நடுநிலைப் பண்பும் உள்ள ஒரு வைணவனைக் கண்டுபிடி. அவன் உன்னை மதித்துத் தனக்குச் சொந்தமானவன் என்று நினைக்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். உன் ஆணவம், செருக்கு அனைத்தையும் தூர எறிந்துவிடு. அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட. இதுதான் நான் உனக்குச் சொல்லும் கடைசி வழி. இதைத் தவிர உன் நன்மைக்கு உரிய வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
ஸ்ரீ ராமானுஜர் , வாழ்க்கைக்கு ,வைணவனைக் , உன் கடமைகளை, இறைவனுக்குச்
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.