பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. நீர் வழியாகவும், கிருமித் தொற்று வழியாகவும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. பருவமழையோடு தொடர்புடைய சுகாதாரபாதிப்புகளைத் தணிப்பதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்பதை அங்கீகரித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் தூய்மை இந்தியாஇயக்கம் 2.0 கீழ் தூய்மைப் பயிற்சி, நோயை விரட்டுதல் என்பதற்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது (2024 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை). ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கனமழைகாரணமாக ஏற்படும் சுகாதாரப்பாதிப்புகளைக் கையாள்வதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதை இந்தமுன்முயற்சி உறுதி செய்யும்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அமல்படுத்துவதற்கான தூய்மை, துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் தூய்மைப் பயிற்சி, நோயை விரட்டுதல் என்பதற்கான இயக்கம் கவனம் செலுத்தும். சிறப்புத் தூய்மை இயக்கங்கள், கழிவுகளைச் சேகரித்துகொண்டு செல்லுதல், சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகள் அனைத்தையும் தொடர்ந்து தூய்மை செய்தல், குழந்தைகளுக்கான தூய்மைவசதிகள், போதியஅளவு தரமான குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இதற்காக உள்ளூர் சமூகங்களுக்கும், அமைப்புகளுக்கும் தூய்மைப் பயிற்சி அளித்தல், தண்ணீர் மேலாண்மை, துப்புரவு, தூய்மை, விழிப்புணர்வு ஆகியவற்றில் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சிஅளித்தல், உள்ளூரில் இருக்கும் அரசு சாரா அமைப்புகளை, சமூகக் குழுக்களை, தனியார் துறையினரை ஈடுபடுத்துதல் ஆகியவை பருவமழைக் காலத்தில் நோய் பாதிப்பைக் குறைத்து தூய்மை சூழலை ஏற்படுத்தும் தயார் நிலைக்கான முன்முயற்சிகளாகும்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |