சைவர்களின் புனித நூலான தேவாரம் புகழும் ஸ்ரீ இராம பிரான் புகழ்.

சைவர்கள் கொண்டாடும் இராம பிரான்… இராவணனைக் கொன்றப் பழி தீர, இராமபிரான் பூஜித்தது இராமேஷ்வரம் கோவில் இலிங்கம் இந்த இலிங்கம் தான் சீதாதேவியார், மணலால் பிடித்துவைத்த இலிங்கம்.இங்கு பூஜிக்கச் சிவலிங்கம் கொண்டுவரும் பொருட்டு, அனுமான் காசிக்குச் சென்று வரத் தாமதம் ஆகிய நிலையில் கொண்டுவந்து சேர்த்த இலிங்கம், காசி விஸ்வநாதர் எனத் தனியாக வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் சிவபெருமான் புகழையும் இராமேஷ்வரம் கோவிலை கட்டிய இராமபிரான் புகழையும் பாடியுள்ளார்கள்.
சம்பந்தர் தேவாரம் 3 ம் திருமுறை பாடல் 10 மற்றும் 101 அப்பர் பெருமான் தேவாரம் 4 ம் திருமுறை 61 வது பாடல். சைவம் சொல்கிறது அடியாருக்கும் அடியேன் என்று ஈசன் வணங்கி அவன் அருளை பெறுவதை விட அவன் அடியார்களை வணங்கி ஈசன் அருளை எளிதாக பெற்று விடலாம்.

இராமேஷ்வரம் கோவிலை கட்டி வழிபட்ட இராமபிரானுக்கும் அடியேன்
இராமேஷ்வரத்தை வழிபட்டால் நம் வினை தீருமாம் சம்பந்தர் சொல்கிறார்
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன் பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற, ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

இராமன் நாட்டில் இராமநாதரை தந்த அயோத்தி நாயகனின் அயோத்தியில் இராமபிரான் ஆலயம் கும்பாபிஷேகம் இந்த உலகையே மாற்றி அமைக்கட்டும் அன்பின் வழியில்.

தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

#Ayothaya #ayothiramartemple #jaishriram #JaiSriRam #ஸ்ரீராமஜெயம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...