படிப்படியாக மது விலக்கு என்பது ஏமாற்று வேலை…

  ''அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு, படிப்படியாக அமல்படுத்தப்படும்,''  என்று சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில்  வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து மக்களை மீண்டும் ஏமாலியாக்கும் ஒரு முயற்சியினை எடுத்துள்ளார் ஜெயலலிதா.

 

மக்களும் படிப்படி என்றால் காப்படியா?, அரைப்படியா?, முக்கால் படியா? என்று சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு  தாங்கள் முட்டாள்கள் அல்ல என்று எதிர்வினையாற்றி வருகின்றனர்.

 

தமிழகத்தில் மதுவால் பல லட்சம் குடும்பங்கள் இருள் மயமாகி வருகிறது, இருள் நீங்க!, பல குடும்பங்களில் அணையும் தருவாயில் உள்ள விளக்குகள் சுடர்விட்டு எரிய  மதுவிலக்கு என்பது இன்றியமையாத ஒன்றுதான். அதை வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அன்று அத்தகைய போராட்டங்களை எல்லாம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிய தமிழக அரசு. மதுக்கடைக்கு எதிராக நின்று போராடுவதையே அவமானமாக கருதிய தமிழக அரசு.

 

நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூட சொல்லி ஐகோர்ட் உத்தரவிட்ட போது, அதனை  எதிர்த்து அப்பீலிற்கு சென்ற தமிழக அரசு. மதுவுக்கு எதிராக போராடிய சசிபெருமால் மரணத்திற்கு  பின்பும் படிப்படியாக மதுவை குறைக்காத தமிழக அரசு!, இன்று தேர்தல் வந்தவுடன் படிப்படி என்று பதறிய படி அறிவித்துள்ளது நம்பும்படியாக இல்லை.

1971–ல் தி.மு.க. அரசு மது, கள், சாராயக்கடைகளைத் திறந்து மதுவிலக்கை  நீக்கி தூபம் போட்டது, இருப்பினும் 1974–ல் தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே,  மீண்டும் மதுக்கடைகளை மூடினார்கள் என்றாலும். அதற்கு பின்பு வந்த அதிமுக அரசு  1981ல் மீண்டும் மதுக்கடைகளை திறந்து மதுவிலக்கை  நீக்கியது.  தொடர்ந்து வந்த திமுக அரசும் அதை அமோதித்தது. இதில் ஒரு படி மேலே சென்று   2003ம் ஆண்டுக்கு பிறகு மது சில்லறை விற்ப்பனைக் கடைகளை அரசே ஏற்று நடத்தியது., மது உற்பத்தி ஆலைகளை ஆட்சியாளர்களே (திமுக, அதிமுக) நிறுவிக் கொண்டார்கள்.

 

இதனால் அரசுக்கு லட்சம் கோடி வருவாய் என்றால், ஆட்சியாளர்களுக்கு மது ஆலைகளின் வழியாக பலாயிரம் கோடி வருவாய் கொட்டுகிறது. இப்படி நோகாமல் வரும் வருவாயை எப்படி விட்டுக் கொடுப்பார்கள். 

 

எனவேதான் அடுத்து  ஆட்சிக்கு வந்தால் படிப் படியாக அமல் படுத்துவோம் அதற்க்கு  2020ம் ஆண்டுவரை! அதாவது அடுத்த ஆட்சி முடியும் வரைகூட  காலம் எடுக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஜெயலலிதா. இதையேதானே கடந்த 2008ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்  கலைஞரும் சொன்னார் செய்தாரா?.

 

மது வேண்டாம் என்றால் ஒரே நாளில் அமல்படுத்தி விடலாமே. மது இல்லாத மாநிலமாக குஜராத் வெற்றி நடைப்போடுகிறதே. சமிபத்தில் அந்த பட்டியலில் பீகாரும் இணைந்துள்ளதே. அருகில் உள்ள கேரளாவும் அந்த முயற்சியில் முழுமையாக இறங்கியுள்ளதே.

ஒரே நாளில் அமல்படுத்தினால் குடிக்கு அடிமையான சில லட்சம் குடிகாரர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகலாம். சிலாயிரம் நபர்களைத் தவிர மற்ற அனைவரையும் மீட்டு விடலாம் சாத்தியமே. பலர் பக்கத்து மாநிலத்துக்கு செல்லலாம். கள்ளச் சாராயத்தை நோக்கி செல்லலாம், கட்டாயம் குடித்தே ஆகவேண்டும் என்பவர்களின் முயற்சி அது. அவர்கள் எப்படியோ போகட்டும்.

ஆனால் குடிக்க தண்ணீர் கேட்டால் மதுவை தரும் கலாச்சாரத்தை நோக்கிய இன்றைய இளைய தலைமுறைகளின் பயணம் தடுக்கப்பட வேண்டும். இதற்கு ஒரே நாளில் மதுவிலக்கு என்கிற உத்தரவே  சாத்தியம். மற்ற அனைத்தும் ஏமாற்று வேலையே!!!!!.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...