வாய் துர்நாற்றம் குணமாக

 எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 நிமிடம் கழித்து விழுங்க வேண்டும். காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்துவர சரியாகும்.

கரிசலாங்கன்னி, முசுமுசுக்கை, முருங்கைக்கீரை இவற்றில் தினம் ஒன்றாக பருப்புடன் கூட்டு செய்து மதிய உணவுடன் உண்டு வர வேண்டும். அத்துடன் தினம் ஒரு மாதுளம் பழமும் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டு வர துர்நாற்றம் விலகும்.

இரண்டு எலுமிச்சை அளவு புதினா இலைகளைச் சுத்தம் செய்து அதில் 2 ஏலக்காயை நசுக்கி சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு இலைகளையும் ஏலக்காய்த் தூளையும் போட்டுக்காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி ஆறியதும் வடிகட்டி இரண்டு பங்காக்கி காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் வாயில் ஊற்றி 3,4 முறை கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய துர்நாற்றம் சரியாகும்.

ஒரு அங்குல நீளமுள்ள வசம்பை இடித்துத் தூளாக்கி தூளை வாயில்போட்டு சாரத்தை கொஞ்சங் கொஞ்சமாக சப்பி விழுங்க வேண்டும். 15 நிமிடம் கழித்து சக்கையை துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, மாலை 3 நாட்கள் செய்ய நிவாரணம் பெறலாம்.

பத்து எலுமிச்சைத் தோல்களை வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து 8 ஸ்பூன் தூளுக்கு 1 ஸ்பூன் உப்புத்தூள் கலக்கி ஒரு பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தூளை எடுத்து ¼ ஸ்பூன் நல்லெண்ணெயில் குழப்பி அதை பல்துலக்கி 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இச்சிகிச்சையை செய்ய வேண்டும். வாய் நாற்றம் அகலும் வரை விளக்கிவர வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...