சர்வதேச யோகா தினமான ஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம் யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. கடந்தாண்டு பிரதமர் மோடி டெல்லியில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு யோகா தினத்தை தொடங்கிவைத்தார்.
இதில் ஏராளமான பள்ளி மாணவ–மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.அதே சமயம் நாடுமுழுவதும் உள்ள மாணவ–மாணவிகளும், பொது மக்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு வருகிற ஜூன் 21–ம் தேதி சர்வதேச யோகாதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிரதமர் மோடி யோகாபயிற்சியில் ஈடுபடுகிறார். இந்தமுறை சண்டிகாரில் பிரதமர் மோடியின் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப்–அரியானா மாநிலங்களில் கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை மீட்டெடுக்கும்வகையில் விவசாயிகளை யோகா பயிற்சியில் ஈடுபடுத்தும் விதமாக சண்டிகாரில் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். கடந்தமுறை டெல்லியில் பிரதமர் மோடி 30 நிமிடம் யோகா பயிற்சி செய்தார். இந்தமுறை சண்டிகாரில் அவர் 1 மணி நேரம் யோகாபயிற்சி செய்கிறார். இதில் மோடியுடன் யோகா பயிற்சியில் ஈடுபட 35,985 பேர் முன்பதிவு செய்துள்ளதாக 2016 யோகா தினம் தலைவரும் மோடியின் யோகா குருவுமான எச்.ஆர்.நாகேந்திரர் தெரிவித்தார்.
அன்றைய தினம் 1 மணி நேரத்தில் 45 நிமிடங்கள் பொதுவான யோகாபயிற்சிகளும் 15 நிமிடங்கள் பிரணயாமா, யோக நித்ர, தியானம், சத்சாங் போன்ற யோகா பயிற்சிகள் நடைபெறும்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.