10-வது சர்வதேச யோகாதினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஶ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகாதின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா சனங்களை மேற்கொண்டார்.
உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. நரேந்திர மோடியின் தொலை நோக்குடன் கூடிய இந்தபிரகடனம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69-வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
10-வது சர்வதேச யோகா தினம் 2024 இன்று உலகம்முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஶ்ரீநகரின் எஸ்கேஐசிசி-யில் நடைபெற உள்ள சர்வதேச யோகாதின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றார். “நமக்கும் சமுதாயத்திற்கும் யோகா” என்பதே இந்த ஆண்டின் மையக்கருத்தாகும்.
தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சமுதாயநல்லிணத்தை மேம்படுத்துவது யோகா முக்கியப்பங்கு வகிப்பதை எடுத்துக் காட்டும் வகையில், இந்த ஆண்டு மையக்கருத்து அமைந்துள்ளது.
ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உலகளாவிய சுகாதாரம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்த, ஆயிரக் கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். யோகாவின் பலன் பெருமளவிலான மக்களை சென்றடைய செய்யும்விதமாக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் எழுதிய கடிதத்தில் முழுமையான ஆரோக்கியத்திற்கு, யோகா மற்றும் சிறுதானியங்கள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் சார்ந்த இயக்கமாக யோகா தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |