பொதுத்துறை நிறுவன மான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்.) தனது பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகிறது. இதன் ஒருஅங்கமாக பொன்விழா ஆண்டு நினைவு தூண் திறப்பு விழா சென்னை மணலியில் உள்ள சி.பி.சி.எல். சுத்திக்கரிப்பு ஆலையில் நேற்று நடந்தது.
விழாவுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கி, பொன் விழா ஆண்டு நினைவு தூணை திறந்துவைத்தார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பொன்விழா கொண்டாட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
ஒரு நிறுவனம் 50 ஆண்டுகளாக அந்தபகுதி மக்களோடு இரண்டற கலந்து சிறப்பாக செயல்படுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். இந்தியாவை உலகஅளவில் தலைசிறந்த நாடாக உருவாக்கவேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கிறார். சமையல் எரிவாயுமானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்ததிட்டத்தின் கீழ் ஒரு கோடி பேர் தங்களுடைய மானியத்தை தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைகளுக்கு இலவசமாக எரிவாயுவழங்க முடியும். 14 மாநிலங்கள் இந்ததிட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றன. தமிழகமும் முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். ‘பஹல்’ திட்டத்தின் மூலம் 15 கோடி பேருக்கு வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக இருக்கவேண்டும். இதையே மத்தியஅரசும் விரும்புகிறது. மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.