கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இ லையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடையும்.

சிலவகைக் கட்டிகள் பழுத்து உடையாது. கட்டியாகக் கிளம்பி அப்படியே நின்றுவிடும். இப்படிப்பட்ட கட்டிகளை அமுங்கச் செய்யக் கருஞ்செம்பை இலையை சிற்றாமணக்கெண்ணெய்யில் வதக்கி, கட்டியின் மேல் வைத்துக் கட்டி வந்தால் மூன்றே நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து, காயத்தைச் சுத்தம் செய்து விட்டு, காயத்தின் மேல் கனமாக வைத்துக் கட்டிவிட வேண்டும். மறுநாள் கட்டை அவிழ்த்து மருந்தை எடுத்துப் பார்க்க வண்டும். மருந்து தனியே வந்து விட்டால், அதை எடுத்து விட்டுப் புன்னைச் சுத்தம் செய்து, மறுபடி இலையை அரைத்துக் கட்ட வேண்டும். எடுக்க வரவில்லை யானால் அப்படியே விட்டு விட வேண்டும். புண் ஆறிய பின் இலை தனியே வந்து விடும். அது வரை ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில பெண்மணிகளுக்கு மாதவிலக்கு ஒழுங்காக வெளியேறாது. இதனால் வயிற்று வழியும், சில தொந்தரவுகளும் உண்டாகும். இதை ஒழுங்கு படுத்தி மாதவிடாய் ஒழுங்காக வெளியேறக் கருஞ்செம்பை இலையை நைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, துணியில் வடிகட்டி, 8 தேக்கரண்டியளவு எடுத்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மாதா மாதாம் மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும். பத்தியமில்லை.

ஒரு பெரிய இரும்புக் கரண்டியை எடுத்து அதில் இரண்டு சங்களவு நல்லெண்ணையை விட்டு 12 கருஞ்செம்பைப் பூவை போட்டு, கழற்சிக் காயளவு கஸ்தூரி மஞ்சளையும், அதே அளவு சாம்பிராணியையும் சேர்த்துக் கரண்டியை எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்து, மருந்து சிவந்து வரும் சமயம் இறக்கி ஆறவைத்து, எண்ணையை மட்டும் இறுத்து தலையில் நன்றாகத் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் எப்போதும் போலத் தலை முழுகி வந்தால் நீடித்த தலைவலி, மண்டைக் குத்து இவைகள் பூரணமாகக் குணமாகும்.

சிரங்கு குணமாக கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்துக் காலையில் சிரங்கின் மேல் கனமாகத் தடவி மாலை வரை வைத்திருந்து, மாலையில் சுட்ட சிகைக்காய், மஞ்சள் வைத்து அரைத்த கலவையைப் போட்டுச் சுத்தம் செய்து, சாம்பல் ஒத்தடம் கொடுத்து தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த விதமாக ஐந்து நாட்கள் செய்தால் போதும் சிரங்குகள் யாவும் மறைந்து விடும்.

இம்மரத்தின் பட்டையை சருகு போலக் காய வைத்து இடித்து சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை ஒரு டம்ளர் காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, தேவையானால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலக்கி கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 40 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

தேள், பூரான், குழவி, வண்டு, சிறுபாம்பு, தேனீ மற்றும் சிறு விஷப்பூச்சிகள் கடித்து அதன் விஷம் காரணமாக உடலில் வலி, கடுப்பு, தடிப்பு மற்றும் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், காணாக் கடி சம்பந்தமான விஷம் காரணமாக ஏற்படும் கோளாறு நீங்கவும் கருஞ்செம்பை வேரையும் விதையையும் சம அளவாக எடுத்துக் காய வைத்து, உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து வாயகன்ற ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை சுண்டைக்காயளவு வெண்ணையில் இரண்டு சிட்டிகையளவு இந்தத் தூளைப் போட்டுக் கலக்கிக் கொடுத்து வந்தால் எந்த வகையான விஷமானாலும் அது முறியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.