வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, அரைத் தேக்கரண்டி மிளகு, அதே அளவு சீரகம் இரண்டையும் நைத்து இத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வந்தால் வயிற்றுப் பெருமல் அடங்கும். வயிற்று வலி குணமாகும்.
3௦ கிராம் இஞ்சியை வாங்கி வந்து, அதன் தோலை சீவிக் கழுவி விட்டு, சுண்டைக்காயளவு பருமனாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து இதில் விட்டு, 5 கிராம் இந்துப்புத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி வெயிலில் வைக்க வேண்டும். உலர உலர சாற்றில் போட்டு எடுத்து, இஞ்சித்துண்டுகளை உலர்ந்த பின் அதே சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் போதும். பித்தக் கோளாறு அத்தனையும் குணமாகும்.
இருதய பலவீனம், இருதயத்தில் வலி, இருதயப் படபடப்பு போன்ற கோளாறுகளைப் போக்க, 1௦ கிராம் இஞ்சியைக் கழுவி, அம்மியில் வைத்து நைத்துச் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்தால் அதிலுள்ள சுண்ணாம்பு வண்டல் அடியில் தங்கிவிடும். மேலே தெளிந்த நீர் நிற்கும். இந்த நீரை மட்டும் வடிகட்டி, அத்துடன் இரண்டு தேக்கரண்டி தேனும் சேர்த்துக் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து விடவேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெரும். இருதய சம்மந்தமான கோளாறுகள் நீங்கும்.
வறட்டு இருமலாக இருந்தாலும், ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தாலும் அதை குணப்படுத இஞ்சியை தட்டிச் சாறு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்திருந்தால் சுண்ணாம்பு அடியில் தங்கி, மேலாகத் தெளிவு நீர் நிற்கும். தெளிந்த நீரை மட்டும் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவும், மாதுளம் பழத்தை இரண்டாக நறுக்கி உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவும், ஒரு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து, கலக்கி காலை, மாலையாக இரண்டு வேளை சாப்பிட்டால் இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு பாதியளவு கொடுக்க வேண்டும்.
இஞ்சி 5 கிராம், சீரகம் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து, அதை அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிந்த நீரும், அடியில் சுண்ணாம்பு வண்டலும் தேங்கி நிற்கும். மேலே உள்ள நீரை மட்டும் இறுத்தி மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சங்களவு குடித்து வந்தால் அஜீரணம் புளியேப்பம் நீங்கும்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.