உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடவேண்டாம்

 

உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடவேண்டாம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறையால் பாதிப்புக்குள்ளான காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மற்றநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறும் பாகிஸ்தான் காஷ்மீரில் வன்முறையை ஊக்கப்படுத்தகூடாது. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ள வேண்டும். பாகிஸ்தானின் அணுகு முறை மற்றும் மனப் போக்கை நெருக்கும் சக்தியாக ஜம்மு காஷ்மீர் மாற வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி காஷ்மீர் நிலை குறித்து பெரும்கவலை அடைந்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து அமைதியை கொண்டுவருவோம். இதில், "மூன்றாவது சக்தி" ஈடுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை,

பாதுகாப்பு படையினரை நிதானமாக இருக்கவேண்டும். அமைதி நிலவ மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என்றார்.

தேவைபட்டால் காயம் அடைந்தவர்கள் தில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.காஷ்மீர் வனமுறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...