கோழிமுட்டை
தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; விரைவில் ஜீரணப்படாது; வாய்வு உண்டாகும். ஆகையினால், இதை முக்கால் வேக்காடு வேகவைத்து உண்ணவேண்டும்.
வாத்துமுட்டை
தேகத்துக்கு வலுவு கொடுக்கும். உடல் பருக்கும். வாயுவை உண்டாக்கும். மந்திக்கும். வான்கோழி முட்டைக்கும் இதுவே குணம். இஞ்சி, கொத்துமல்லி, சீரகம் சேர்த்துச் சமைக்க வேண்டும்.
முட்டைகளில் ஏ,பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்துகளும், தசை வளர்க்கும் பொருளும், கொழுப்பும் உள்ளன. பாலுக்கு நிகரானது முட்டை. பால் குறைவாக உள்ள நமது நாட்டில் முட்டையை அதிகமாக உண்பது நல்லது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கும் இது ஏற்றதாகும். வெள்ளை நிறமான ஓடு உள்ள முட்டையைவிட, பழுப்பு நிறமான ஓடு உள்ள முட்டைகளில் அதிக சத்து உண்டு. சமைக்கும் முட்டைகள் புதிதானவையாயிருக்க வேண்டும். அழுகிய முட்டைகளும், கெட்டுப்போன முட்டைகளும் ஆகா.
புறா முட்டை
தேகம் தழைக்கும். தாது அதிகரிக்கும். ஜீரணம் ஆகும். நெய்யில் பொறிக்கவேண்டும்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.