பர்ஹான் வானி என்ற தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கலவரத்தை அடக்கப் பாதுகாப்புப் படையி னர் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் பார்வையை இழந்திருக்கிறார்கள். ‘
காஷ்மீர் கலவரத்தைப் படைபலம் கொண்டு அடக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அது மேலும் மேலும் கசப்புணர்ச்சியை வளர்த்துவிடும். அதற்குப் பதிலாக அவர்களது மனப்புண்களை ஆற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்’ என்று அறிவு ஜீவிகள் அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கலவரம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் நடக்கிற உபதேசங்கள் தான் இவை.
பிரிவினை வாதம் பேசுவதும், பிரிவினைவாத அமைப்பை நடத்துவதும் அங்கே பலருக்கும் தொழிலாக இருக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து பணம் கிடைக்கிறது. அந்தப் பணத்திற்காக மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தேசியத்திற்கு எதிராகவும் பிரசாரம் நடக்கிறது. பிரிவினை கேட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன. கலவரங்கள் தூண்டப்படுகின்றன.
இப்போது நடக்கும் இந்தப் போராட்டத்திற்கும் கூட, போராட்டக்காரர்களுக்கு நாளொன்றுக்குத் தலா ஐநூறு ரூபாய் தரப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, மக்கள் ஜனநாயகக் கட்சியும் சரி, பிரிவினைவாதிகளையும், பிரிவினைவாதத்தையும் ஒடுக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. தேர்தல் காலங்களில், பிரிவினைவாதிகளின் ஆதரவை நாடி நிற்கிற அவல நிலையில் தான் இந்த இரு கட்சிகளுமே இருக்கின்றன.
காஷ்மீர் மக்களின் மனப்புண், காஷ்மீரில் நிலவும் தீவிரவாத நடவடிக்கைகளால் தான் ஏற்பட்டது. இந்திய மக்களோ, மத்திய அரசோ மருந்திட்டு இந்தப் புண்ணை ஆற்றிவிட முடியாது.
அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணமாக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டிருக்கும் காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்தை ரத்து செய்து, இந்தியாவின் எல்லா பகுதிகளும் காஷ்மீர் மக்களுக்குச் சொந்தம், எல்லா இந்தியர்களுக்கும் காஷ்மீர் சொந்தம் என்ற நிலையை அங்கு ஏற்படுத்துவதுதான் அந்த அறுவைசிகிச்சை.
நோயாளியின் நன்மை கருதிச் சில சமயங்களில் அவரது விருப்பம் இல்லாமலேயே கூட அறுவை சிகிச்சை செய்வது அவசியம். காஷ்மீர் மாநிலம் அந்த வகையான நோயாளியைப் போலத் தான் இருக்கிறது…
நன்றி துக்ளக் Guru Ji
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.