கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்சனைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த வழி.
வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத் தொல்லை, மலச் சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச் சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளியை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது.
சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஷ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக் காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூடும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
பப்பாளி வைட்டமின் ஏ, பி, சி செறிவுடையது. நலமளிப்பது, சீரணிப்பது, மலமிளக்கி, இளமையும் வனப்பும் தருவது. நன்கு பழுத்த பழம் சீரணக் கோளாறுகளைத் தீர்க்கும். தொடர்ந்து பயன்படுத்த வயிற்றுத் தொந்தரவுகள் அனைத்தையும் குணப்படுத்தும்.
பப்பாளிக்காய் மஞ்சட் காமாலை, இரப்பை சவ்வு அழற்சி மற்றும் கல்லீரல் கோளாறுகளில் பரிந்துரைக்கப்படும். முலாம் பழம் போன்று இருக்கும். கொத்துக் கொத்தாய் காய்க்கும். மரம் 20 அடி உயரம் வளரும்.
சீரணத்துக்கு உதவும் பெப்சின் என்கிற சத்து நீர் பப்பாளிக் காயில் உண்டு. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாப்பெய்ன் மருந்துத் தயாரிப்புத் தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படும். முதுமை அடைகிறபோது நம்முடைய உடம்பில் உள்ள இயற்கையான ரசங்கள் குறைந்த அளவே சுரக்கும். அதனால் முழுமையாக சீரணிக்க முடிவது இல்லை. அதன் விளைவாக வாயுத் தொல்லை, நெஞ்செரிவு, உப்புசம், வயிற்றில் அசவுகர்யம் ஏற்படும். அப்போது பப்பாளியில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள் தீர்வாக இருக்கும்.
குடல் உபாதைகள்
இரப்பைரசம், வயிற்றில் உள்ள ஆரோக்கியக் கேடான சளிப்படலம், அசீரணம், குடல் எரிச்சலில் நல்ல பலனை அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை சரி செய்யும். நாட்பட்ட வயிற்றுப்போக்கு, பித்தப்பையில் இரத்தக் கசிவு இவற்றையும் பப்பாளிப்பழம் குணப்படுத்தும். பப்பாளி விதைச்சாறு மூலத்தில் இரத்தம் வடிவத்தைத் தடுக்கும்.
தொண்டை உபத்திரவங்கள்
பப்பாளிபழச் சாற்றுடன் தேன்கலந்து கொடுக்க டிப்தீரியா, தொண்டை அழற்சி போன்ற கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். சவ்வுப்படலத்தைக் கரைக்கும்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.