தன் வீடு பற்றி எரிந்துகொண்டு இருக்கும் போது, பக்கத்து வீட்டு அகல் விளக்கின் ஒளியை பூதாகரமாக ஆக்கிய, பூதாகரமாகவே ஆக்க முயலும் பாகிஸ்தானின் அடாவடி தனத்துக்கு தனது சுதந்திர தின உரையின் மூலம் குட்டு வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜம்மு கஷ்மீரில் சென்ற மாதம் 8 ஆம் தேதி புர்கான் வாணி என்ற முக்கிய தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக பதற்றம் நீடித்து வருகிறது. புர்கான் வாணிக்கு மாநிலம் முழுவதும் இவ்வளவு செல்வாக்கா என்றால் இல்லை. புர்கான் வாணிக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்திருக்குமே என்றால் அங்கே உள்ள பெரும்பாலான இளைஞர்களின் கைகளில் ஆயுதங்கள்தான் தரித்திருக்கும். எனவே புர்கான் வாணியை வைத்து பாகிஸ்தான் கைக் கூலிகள் போடும் ஆட்டமே ஜம்மு கஷ்மீர் பதற்றம், காஷ்மீர் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா லட்சம் கோடியை செலவு செய்கிறது என்றால், அதில் கால்பங்கை காஷ்மீரின் அமைதியை சீர்குலைப் பதற்காகவே பாகிஸ்தான் ஒதுக்குகிறது.
கடந்த 60.,வது ஆண்டுகளாக அதில் உண்டு கொழுத்தவர்கள்தான் காஷ்மீர் பிரிவினை வாதிகளும், மிதவாதிகள் போர்வையில் இருக்கும் ஹூரியத்துக்களும். புர்கான் வாணியை சுட்டுக் கொன்றதன் மூலம் இவர்களுக்கு ஏற்க்கனவே அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ள மத்திய அரசு. பலூசிஸ்தான், கில்கித், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சனையை கிளப்பியதன் மூலம் பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது.
பிரதமர் சுதந்திர தின உரையின் மிக முக்கியமான இரண்டு கருத்துகள், பலூசிஸ்தான் பற்றியதும், பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்கிற உரிமைக் குரலும். அதேபோல, லடாக்கை ஒட்டியுள்ள, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜில்கிட், பால்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை என்பதையும் சற்று ஆணித்தரமாகவே பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளார் இதற்கு முன்னால் எந்தப் பிரதமரும் துணிந்து வெளிப்படையாக சொல்லாத ராஜ தந்திர முயற்சி இது.
இதுவரை இந்திய அரசு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் வெளிப்படையான தலையீடும், தீவிரவாத ஆதரவு போக்கும் தொடர்ந்த போதிலும் மென்மையான பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தீர்வு காண முயன்றது. இதை பாகிஸ்தான் ஒரு பலவீனமான போக்காக எண்ணியதாலேயே புர்கான் வாணியை ஒரு தியாகியாக போற்றி, அவனது இறப்பை ஒரு துக்க நாளாகவே அனுசரிக்கும் அளவுக்கு சென்றது.
அதே புர்கன் வானிகள் தான் பாகிஸ்தான் பள்ளியில் புகுந்து 144 அப்பாவி மாணவர்களை கொன்று குவித்தார்கள். சமிபத்தில் கூட 60 ஷியா பிரிவு வழக்கரிஞர்களை குண்டு வைத்து கொன்றார்கள் என்பதை உணர மறுக்கும் மூடர்கள் நிறைந்த தேசம்!. மயிலே, மயிலே என்றால் துரோகத்தையும் , வஞ்சத்தையும் மட்டுமே இறகாக போடக் கூடிய தேசம்!! பாகிஸ்தான்.
‘’பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளிக் குழந்தைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இங்குள்ள ஒவ்வொரு பள்ளியும் கண்ணீர் சிந்தியது. அதுதான் மனித நல்லொழுக்கத்தின் வெளிப்பாடு. ஆனால், மற்றொருபுறம் என்ன நடக்கிறது எனப் பாருங்கள். அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படும் போதும் பாராட்டு நடக்கிறது. தீவிரவாதிகளை தியாகிகள் என சிலர் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இருநிலைப் பாட்டை உலக நாடுகள் அறிய வேண்டும்,”- பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்கு அமெரிக்க பாணி சிகிச்சைகள் மட்டுமே ஒத்து வரும். ஒசாமா பில் லேடனை பாகிஸ்தான் மண்ணிலே வைத்து அமேரிக்கா சுட்டுக் கொன்ற போதிலும் அவனை தியாகியாக, வீரப் போராளியாக போற்றிப் பாதுகாத்த தேசம், தனது பாசத்தை மனதுடன் நிறுத்திக் கொண்டது, வெளிப்படுத்தவில்லை. காரணம் பயம், நிர்பந்தம். மூடர்களை கட்டுப்படுத்தும் மிகச் சிறந்த ஆயுதங்களும் இவைகளே.
எனவேதான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலூசிஸ்தான் ஆயுதங்களை மோடி எடுத்துள்ளார் இது நிச்சயம் பாகிஸ்தானுக்கு பயத்தை மட்டும் அல்ல காய்ச்சலையே தந்திருக்கும்.
தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.