சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்த 2வது நாள் ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, திறமையான நிதி நிர்வாகத்திற்கு, ஊழலுக்கு எதிராக மற்றும் பொருளாதார குற்றமிழைப் பவர்களின் புகலிடங்களை ஒழிப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது அவசியம் என இன்று தெளிவுபடகூறினார். வங்கிகளின் கூடுதலான ரகசிய வலையமைப் பினையும் உடைத்தெறிய வேண்டும் என ஜி20 உறுப்பினர்களை அவர் கேட்டுகொண்டுள்ளார்.
சீனாவில் உள்ள ஹான்சூ நகரில் நடைபெறும் ஜி–20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்ற பிரதமர் முதலில், வியட்நாம் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் புக் ஆகியோரும் சந்தித்து பேசியபோது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ரூ.3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
வியட்நாம் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து சீனாவின் ஹாங்சோவ் நகருக்கு நேற்று முன்தினம் இரவு போய்சேர்ந்தார். ஹான்சூ போய் சேர்ந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நேற்று காலை சீன அதிபர் ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார்.
அதன்பிறகு 2 நாட்கள் நடைபெறும் ஜி–20 நாடுகள் மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மோடி பேசுகையில், நமக்கு உள்ள சவால்களும், வாய்ப்புகளும் பொதுவானவை என்றும், தொழில் வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் மூலம் அடுத்த தலைமுறை யினருக்கான வளர்ச்சிக்கு வித்திடவேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான துறைகளில் முதலீடுகளை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியையும், நிதிநிலையையும் மேம்படுத்த உறுதிபூண்டு இருப்பதாகவும் அப்போது மோடிகுறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று 2வது நாள் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில்பேசிய பிரதமர் மோடி, ஊழல், கறுப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றிற்கு எதிராக போராடுவது என்பது திறமையான நிதிநிர்வாகத்திற்கான முக்கிய விசயம் ஆகும் என கூறினார்.
அதனை அடைவதற்கு, பொருளாதார குற்றமிழைப் பவர்களின் புகலிடங்களை ஒழிக்க நாம் செயல்பட வேண்டியது அவசியம். பணமோசடியில் ஈடுபடு பவர்களை கண்டறிந்து அவர்களை நிபந்தனையற்ற முறையில் நாடுகடத்திட வேண்டும். சிக்கலான சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஊழல்வாதிகள் மற்றும் அவர்களது செயல்களை மறைக்கும் வகையிலான அதிகப்படியான வங்கி ரகசியங்களின் வலைய மைப்பினை உடைத்தெறிய வேண்டும் என கூறினார்.
அவர், நிலையான உலகளவிலான பொருளாதார மற்றும் நிதி அமைப்பு ஆனது வளர்ச்சிக்கு நிச்சயம்தேவை. அதனால் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்றும் கூறினார். உலகநிதி பாதுகாப்பு வலை அமைப்பினை நாம் கூடுதலாக வலுப்படுத்திட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.