பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். மோடி தனது 66-வது பிறந்த நாளை ஒட்டி தாயிடம் ஆசிபெற்றார். குஜராத் காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அவர் தனது தாயை சந்தித்தார். அரசியல்கட்சி தலைவர் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள தனியார் பள்ளியில் மோடியின் பிறந்தநாளை மாணவர்கள் புதுமையாக கொண்டாடினர். அவரை போன்று தோற்றமளிக்கும் முகமூடி அணிந்துகொண்டு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிக் கடை உரிமையாளர் ஒருவர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு எய்ட்ஸ் பாதித்தபெண்களுக்கு உடைகள் வழங்கினார். மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 255 பேருக்கு உடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நாட்டின் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் ராஜ்பவனில் அவரை சந்தித்து வாழ்த்துதெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குஜ்ராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் ஒரேநேரத்தில் 989 விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலகசாதனை படைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.