பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…

பிரதமர் நரேந்திர மோடி, நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு இன்று (மார்ச் 30- யுகாதி) காலை சென்று, அதன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். உடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட நிர்வாகிகளும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் ஆகியோரும் இருந்தனர். இது தேசிய / உலக அளவில் முக்கிய செய்தியாகி இருக்கிறது.

அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆயினும், அவர் பிரதமரான பிறகான இந்த 11 ஆண்டுக் காலத்தில் சங்க காரியாலயம் வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன் பலமுறை நாகபுரிக்கு பல்வேறு அலுவல்களுக்காக பிரதமர் வந்தபோதும் தாய் அமைப்பின் தலைமை நிலையம் வந்ததில்லை. அதுபற்றி அவரோ, ஆர்.எஸ்.எஸ். தலைமையோ எங்கும் குறிப்பிட்டதும் இல்லை.

அவரது நாகபுரி விஜயம் குறித்து ஊடகங்களில் பல நண்பர்கள் விவாதிக்கின்றனர்; சமூக ஊடகங்களில் பலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் பலரும் புரிந்துகொள்ள இயலாத ஒரு விஷயம் இருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கே உரித்தான சில சமஸ்கிருத வார்த்தைகள் (பொருள் விளக்கத்துடன்) கூறப்பட்டிருக்கின்றன.

முதலில் நரேந்திர மோடி பிரதமர் மட்டுமல்ல, அவர் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்- இதனை தேசிய தன்னார்வத் தொண்டர்கள் கூட்டம் என்று தமிழில் சொல்லலாம்) அமைப்பின் உணர்வுப்பூர்வமான ஸ்வயம்சேவகர் (தொண்டர் என்ற சொல் இதற்கு இணையானதல்ல). அதுமட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிக்ஞை (உறுதிமொழி) ஏற்றவர்; இயக்கத்தின் வளர்ச்சிக்காக சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்த பிரசாரகர் (முழுநேர ஊழியர் என்று சொல்லலாம்). அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு கார்யகர்த்தர் (செயல்வீரர் என்று மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்).

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல நிலைகளிலும், பா.ஜ.க.வில் பல நிலைகளிலும், கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பணியாற்றியவர் நரேந்திர மோடி. அவர் நாகபுரி சங்க கார்யாலயம் (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைமை நிலையம்) வருவது இது முதல் முறையல்ல. ஆனால், பிரதமரான பிறகு இந்த 11 ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட இங்கு வரவில்லை.

இத்தனைக்கும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அவரது பெயர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட ஆர்.எஸ்.எஸ். தலைமைதான் காரணமாக இருந்தது. மகாராஷ்டிர பா.ஜ.க. மூத்த தலைவர் நிதின் கட்கரி (இன்றைய மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர்) தான், ஆர்.எஸ்.எஸ். தலைமையின் வழிகாட்டலில், பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் மோடியின் பெயரை முன்மொழிந்தார். அதன் பிறகே, அப்போது போர்க்கொடி தூக்கியிருந்த மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி சமாதானம் அடைந்தார். இன்று மோடிக்கும் கட்கரிக்கும் இடையே சிண்டு முடிய முயலும் பலரும் அறியாத வரலாறு இது.

என்றபோதும் பிரதமர் மோடி நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு இத்தனை நாட்கள் வரவில்லை. அதேசமயம், அவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. அதைச் செய்துகொண்டே செல்கிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று தாய் அமைப்பு ஒருநாளும் அறிவுறுத்தியதில்லை. தாயை விஞ்சி தனயன் வளரும்போது தாய் வேதனைப்படுவதில்லை; மாறாக அதீத மகிழ்ச்சி அடைவாள். அதேபோன்ற நிலையில்தான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் வளர்ச்சியிலும், அதன் சார்பில் மத்திய அரசில் தலைமைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் வளர்ச்சியிலும் ஆனந்தம் கொண்டது; கொள்கிறது.
2014லேயே அவர் நாகபுரி தலைமை அலுவலகம் வந்து டாக்டர் ஹெட்கேவாரின் நினைவிடத்தில் வழிபட்டுவிட்டு பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இந்த அடையாள அரசியலில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. (1998இல் அடல் பிகாரி வாஜ்பாயும் பிரதமர் பொறுப்பேற்கும் முன் நாகபுரி அலுவலகம் வரவில்லை). சங்கப் பிரார்த்தனையில் (ஆர்.எஸ்.எஸ். தினசரிக் கூடுதலில் பாடப்படும் பாடல்) இடம்பெற்றுள்ள வரிகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமே ஒவ்வொரு ஸ்வயம்சேவகனின் கடமை; இலக்கு. அதுவே நாட்டின் பிரதம சேவகரான மோடியின் கடமையும், இலக்கும் கூட.
இதனை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வெளியில் இருந்து பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள இயலாது. அன்றாட அரசியல் காட்சிகளுடன் இதனை ஒப்பிட்டு கருத்துக் கூறுவோரால் இதனை அறிய முடியாது.

சிந்தித்துப் பாருங்கள்… நாகபுரியில் 1925இல் நான்கைந்து சிறுவர்களுடன் விளையாட்டாகத் தொடங்கிய ஒரு அமைப்பு இன்று நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக வளர்ந்திருக்கிறது. இதன் துணை அமைப்புகள் ஒவ்வொன்றும் தேசிய அளவில் (பா.ஜ.க., பி.எம்.எஸ்., பி.கே.எஸ்., ஏ.பி.வி.பி., சேவாபாரதி, வித்யாபாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத்,…) தங்கள் துறைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? இதனை சத்தியமான காட்சியாக்கிக் காட்டியவர் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவர் உருவாக்கிய சங்கச் செயல்முறையின் வெற்றிகளில் ஒரு காட்சியே பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு.

டாக்டர் ஹெட்கேவார் பிறந்த நாள் யுகாதி (1889 ஆம் ஆண்டு) எனவே யுகாதி நாளில் நாட்டில் உள்ள அனைத்து ஸ்வயம்சேவகர்களும் தாங்கள் பங்கேற்கும் ஷாகாவில் (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தினசரி ஒருமணிநேரக் கூடுதல்) ‘ஆதித்ய சர்சங்கசாலக் பிரணாம்’ (சங்க நிறுவனருக்கு வந்தனம்) செய்வது வழக்கம். இதற்காகவே, டாக்டர் ஹெட்கேவார் பிறந்த நாகபுரிக்கு யுகாதியான இன்று (மார்ச் 30) வந்து சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தனது ஆர்.எஸ்.எஸ். கார்யாலய வருகை குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள முகநூல் பதிவு கீழே:
“Visiting Smruti Mandir in Nagpur is a very special experience.
Making today’s visit even more special is the fact that it has happened on Varsha Pratipada, which is also the Jayanti of Param Pujya Doctor Sahab.
Countless people like me derive inspiration and strength from the thoughts of Param Pujya Doctor Sahab and Pujya Guruji. It was an honour to pay homage to these two greats, who envisioned a strong, prosperous and culturally proud Bharat.”

அதுசரி… இதனை ஆண்டுகள் வராதவர், இந்த ஆண்டு வந்ததன் காரணம்? ஏனெனில், இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோன்றி நூறு ஆண்டுகள் ஆகின்றன (1925- 2025). எனவே நூற்றாண்டு கொண்டாடும் தாய் அமைப்பின் நிறுவனருக்கு அஞ்சலி செலுத்த பிரதம ஸ்வயம்சேவகர் நாகபுரிக்கு வருகை புரிந்திருக்கிறார்.

நாகபுரி வந்த பிரதமர் மோடி, தாய் அமைப்புடனான பந்தத்தை நினைவுபடுத்தியதுடன் நிற்கவில்லை. அதே நாகபுரியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் தீக்ஷா பூமிக்குச் (அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடம்) சென்று அங்கும் வழிபாடு நடத்தி இருக்கிறார். முதலாவது தாய் அமைப்புக்கு கௌரவம்; இரண்டாவது சமூக நல்லிணக்கத்துக்கு கௌரவம். இப்படிச் சிந்திக்குமாறு அவருக்குக் கற்பித்ததே ஆர்.எஸ்.எஸ். தான்.
தனது தீக்ஷாபூமி விஜயம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பது:

“Deekshabhoomi in Nagpur stands tall as a symbol of social justice and empowering the downtrodden.
Generations of Indians will remain grateful to Dr. Babasaheb Ambedkar for giving us a Constitution that ensures our dignity and equality.
Our Government has always walked on the path shown by Pujya Babasaheb and we reiterate our commitment to working even harder to realise the India he dreamt of.”

சங்கப் பிரார்த்தனையில் உள்ள கீழ்க்கண்ட வரிகள் ஒவ்வொரு ஸ்வயம்சேவகரையும்- பிரதமர் மோடி உள்பட – வழிநடத்துபவை. அவை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பற்றி அறியாமல் புறம் பேசுவோருக்காக இங்கே:

“… மகா மங்களமான புண்ணியபூமியே, உனது பணிக்கென எனது வாழ்க்கை அர்ப்பணமாகட்டும்….சர்வசக்தி வாய்ந்த இறைவனே,… உனது பணிக்காக இந்த கங்கணத்தைப் பூண்டுள்ளோம். அது நிறைவேற, உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு ஆசியாக அருள்வாயாக!… எங்கள் இதயத்தில் குன்றாததும் தீவிரமானதுமான லட்சிய உறுதியானது என்றும் விழிப்புடன் இருக்கட்டும்!… எங்கள் கார்யசக்தி ஸ்வதர்மத்தைக் காத்து இந்த தேசத்தை பரமவைபவ நிலைக்குக் கொண்டுசெல்ல (பாரத) அன்னை எங்களை ஆசீர்வதிக்கட்டும்!”

இந்தப் பிரார்த்தனையின் பொருளுணர்ந்த ஸ்வயம்சேவகர் எங்கிருந்தாலும் அவரது கடமையைச் செவ்வனே செய்வார். எங்கு, எப்போது, எப்படி வர வேண்டுமோ அதன்படி வரவும் செய்வார். இதையே ஸ்வயம்சேவகரான பிரதமர் மோடி சொல்லாமல், செய்து காட்டி இருக்கிறார்.

நன்றி வா.மு முரளி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை ...

அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் – அண்ணாமலை ''மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை. வருகைக்கான ...

வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்� ...

வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்த ...

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்� ...

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் – அமைச்சருக்கு வானதி சீனிவாசன் அறிவுரை ''இந்திய பொறியாளர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை, குறைத்து ...

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதை� ...

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, ...

தமிழகம், பீகார் சட்டசபை தேர்தலி ...

தமிழகம், பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் : அமித்ஷா ''தமிழகம், பீஹார் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்த� ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர உறுப்பினராக முழு ஆதரவு ஆதரவு; ஸ்லோவாக்கியா அதிபர் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...