மோடியால் ஈர்க்கப்பட்ட பலர் அவரை அவதார யுகபுருஷர் என அழைக்கிறார்கள். இதுவரை அவர் யுக புருஷராக இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மீண்டும் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தியா மகத்தான மாற்றத்தை பெறும். நரேந்திர மோடியைவிட நரேந்திர மோடியின் கொள்கைகள் மிக முக்கியம். மிகப்பெரிய, சக்தி வாய்ந்த கொள்கைகள் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்தால் இந்தியா நிச்சயம் மாற்றம் பெறும்,
மோடி பிரதமராக பதவியேற்ற இந்த 2 ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத விதமாக நாட்டுப்பற்று என்பது பிரதமர் அலுவலகத்தின் அடிப்படையான ஒன்றாக ஆகிவிட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நாட்டுப்பற்று என்பது கொள்கையின் முக்கிய அங்கமாகவும், விவாதத்திற் குரியதாகவும் மாறி விட்டது. பல நூற்றாண்டுகளாக நாட்டுப்பற்று என்பத கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாத விஷயமாக இருந்ததுடன், அது கெட்ட வார்த்தையாகவும் மாறிப் போனது.
இந்தியாவின் நாட்டுப்பற்று கொள்கையை மிககுறைவாகவே உலகம் மதிப்பிட்டது. உலகப் போருக்கு முன் உலகின் மிகப்பெரிய தனி அமைப்பாக திகழ்ந்த ஐரோப்பியகூட்டமைப்பு இன்று காணாமல் போய், ஏறக்குறைய நொறுங்கும் நிலையில் உள்ளது. அதன் மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் மட்டுமின்றி பல நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உள்ளன.தங்கள் நாட்டின் அடையாளத்தை காப்பதற்காக அடைக்கலமாகவந்த அகதிகளையும் ஏற்ற மறுத்து வருகின்றன.
அதேசமயம் இந்தியாவின் நாட்டுப்பற்று, எதிர்மறை யாகவோ அல்லது எதிரானதாகவோ மாறிவிடவில்லை. மாறாக உறுதியாக எழுச்சி பெற்றுள்ளது. மையக் கொள்கையாக, குரலாக, இந்தியா மிகப்பெரிய நாடாக மாறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி என்ற தனி மனிதனாலேயே இந்தியர்கள் இந்தபாதையில் பயணிக்க துவங்கி உள்ளனர். நம்பிக்கையுடன், இந்திய கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அந்த எண்ணத்தை அளித்தார். இந்தியாவையும், இந்தியர்களையும் அவர் மீண்டும் பெருமைகொள்ள செய்துள்ளார்.
தத்துவஞானி அரபிந்தோ கோஷ் கூறியதை போன்று, இந்தியா சுயநலத்திற்காக இல்லாமல் தர்மத்திற்காக எழுகிறது. ஊழல்இல்லாத இந்தியா மற்றும் திறமையான அரசு ஆகிய இரண்டையும் நாட்டை உயர்த்துவதற்கான முக்கிய அம்சங்களாக மோடி முக்கியஆயுதமாக கொண்டார். தர்மவழியிலான நாட்டுப்பற்றால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர துவங்கியது. வலுவான பொருளாதார வளர்ச்சி, உணர்வு ரீதியான வெளியுறவுக் கொள்கை ஆகியன இந்தியாவின் பலமாகமாறியது. பலவீனமான, சோர்வான, சந்தேகத்திற்குரிய இந்திய தலைவர்களுக்கு மத்தியில் மோடி வலிமையான, உறுதியான தலைவராக உருவெடுத்தார். இது பலருக்கும் உந்தசக்தியாக அமைந்தது.
சமீபத்திய ஊழல்கள், சுயநல தலைவர்கள் ஆகியோரால் உலகரங்கில் இந்தியா அவமானத்தை சந்தித்திருந்த நிலையைமாற்றி, இந்தியாவின் அடையாளத்தை மாற்றி அமைத்தவர் மோடி. இந்தியர்களுக்கு அவர் அளித்துவரும் உத்வேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. முதல் முறையாக, அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களுக்கு சேவைஆற்றவும், அவர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. அதற்கு தானே முன் உதாரணமாக தானே இந்தியாவின் முதல்சேவகன் என்வும் எடுத்துரைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் அரசு ஆதரவாக செயல்படவில்லை. ஒற்றுமை ஒன்றையே மோடியின் தேசியவாதம், தாரகமந்திரமாக முழங்கி வருகிறது. அதீத இந்துத்துவாவிற்கு எதிராக குரல் எழுப்பவும் மோடி தவறவில்லை. அளவுக்கு மிஞ்சிய தேசியவாதத்தை கட்டுப்படுத்தி, சரி செய்யவும் மோடி தவறவில்லை.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.