மோடி அரசின் புதிய உயிரிப் பொருளாதார கொள்கை

“மோடி அரசின் புதிய உயிரிப் பொருளாதாரக் கொள்கை வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்ற உள்ளது” என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர் நலன் , பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தியாவின் உற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும்  லட்சிய பயோஇ3 (பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழலுக்கான உயிரி தொழில்நுட்பம்) கொள்கை பற்றி மத்திய அமைச்சரவையின் அண்மை முடிவு குறித்து ஊடகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.

உலகளாவிய உயிரி தொழில்நுட்ப ஆற்றல் மையமாக இந்தியா உருவாகிவரும் நிலையில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்புகள், வேலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கடமைகளை மேம்படுத்த உறுதியளிக்கும் புதிய உயிரி தொழில்நுட்ப சாம்பியனாக பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் பாராட்டப்படுவார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பாரம்பரிய நுகர்வு நடைமுறைகளிலிருந்து உயர் செயல்திறன், மீளுருவாக்கம் செய்யும் உயிரி உற்பத்திக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குக் கொள்கையை முன்னெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.

உயிரிப் பொருளாதாரத்தின் எழுச்சி குறித்து பேசிய மத்திய அமைச்சர், “இந்தியாவின் உயிரிப்  பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2014-ல் 10 பில்லியன் டாலர் என்பதிலிருந்து   2024-ல் 130 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்ற வகையில் உயர்ந்துள்ளது. இது 2030-ம் ஆண்டில் 300 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இது,  வளர்ச்சி வேகத்தை மீண்டும் தூண்டும் என்பதுடன் நான்காவது தொழில் புரட்சியில் இந்தியாவை ஒரு சாத்தியமான தலைவராக நிலைநிறுத்தும்” என்றார்.

முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி அடிப்படையிலான ரசாயனங்கள், ஸ்மார்ட் புரதங்கள், துல்லியமான உயிரி சிகிச்சைகள், பருவ நிலைக்கு உகந்த விவசாயம்,  கார்பன் பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்முனைவோரை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது என்றார்.

 

இது அதிநவீன உயிரி உற்பத்தி வசதிகள், உயிரி ஃபவுண்டரி தொகுப்புகள், உயிரி- செயற்கை நுண்ணறிவு   மையங்களை நிறுவும்  என்று அவர் கூறினார்.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப, நெறிமுறை சார்ந்த உயிரி பாதுகாப்பு கோட்பாடுகள், உலகளாவிய ஒழுங்குமுறை ஒத்திசைவு ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பில் முதலீடு செய்வதன் மூலம், பயோஇ3 கொள்கை இந்தியாவின் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ நோக்கத்திற்கு  உதவுகிறது என்பதையும் இது,  அறிவியல் கொள்கைகள் எவ்வாறு தேசிய வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும்   பயனுள்ள வகையில் இயக்க முடியும் என்பதற்கான அளவுகோலை அமைக்கிறது என்பதையும்  டாக்டர் ஜிதேந்திர சிங், மீண்டும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.