மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது கோவையைசேர்ந்த இந்து முன்னணி தலைவர் சசிகுமார், கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், இன்று வரை இந்து இயக்கதொண்டர்கள் 17 பேரை அநியாயமாக குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இதே போல், திண்டுக்கல்லில் செப்டம்பர் மாதம் 25–ந்தேதி பாஜக. தலைவர் போஸின் கார் மற்றும் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல்குண்டால் தாக்கப்பட்டதையும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தொண்டர் நரஹரி மீது இம்மாதம் 4–ந்தேதி கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதையும் உள்துறை மந்திரியிடம் எடுத்துரைத்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 19–ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இந்து இயக்கப் பொறுப்பாளர் சூரி ஓசூரில் படுகொலை செய்யப்பட்டதையும், அதே நாளில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி நகர செயலாளர் சங்கர் கணேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதையும் ராஜ்நாத்சிங்கிடம் விளக்கி கூறினார்.
இதுபோல் தமிழகத்தில் பெருகி வரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், பயங்கரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்வது குறித்து துரித நடவடிக்கை எடுக்கவும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.