கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் -அஸ்டிராய்ட் -பூமிக்கு நெருக் கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலை வில் இருந்தது. பூமிக்கும் இதர கோள் களுக்கும் இடையிலான தூரம் கோடிக் கணக்கான கிலோ மீட்டர் என்பதை வைத் துப் பார்த்தால் 4 லட்சம் கிலோ மீட்டர் என்பது “அருகாமையில்” என்று சொல்லத் தக்கதே.
இந்த விண்கல் 2004 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட போது இது இந்த நூற் றாண்டின் பிற்பகுதியில் பூமியின் மீது வந்து மோதலாம் என்று கருதப்பட்டது. ஆனால் பின்னர் இதன் சுற்றுப்பாதையை விரிவாக ஆராய்ந்த போது அவ்வித ஆபத்து ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டது. பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க இந்த விண்கல்லின் நீளம் சுமார் 700 மீட்டர். எனினும் பூமிக்கு “ஆபத்தை உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ள விண்கல்” என்ற பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
நிபு ணர்கள் தயாரித்து வைத்துள்ள இப்பட் டியலில் சுமார் 783 விண்கற்கள் இடம் பெற்றுள்ளன. சிறியதும் பெரியதுமான இந்த விண்கற்கள் பூமியின் மீது மோத வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது வந்து மோது மேயானால் அதன் விளைவாகப் பேரழிவு ஏற்பட்டு மனித இனமே அழிந்து போக வாய்ப்புள்ளது. பல மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் இப்படியான பறக்கும் பாறை ஒன்று பூமியின் மீது வந்து மோதியிருக்கலாம் என்றும் அதன் விளை வாகவே பூமியில் அப்போது பேரெண்ணிக் கையில் இருந்த டைனோசார் விலங்குகள் கிட்டத்தட்ட பூண்டோடு அழிந்து போனதா கவும் ஒரு கருத்து உள்ளது.
புதன், வியாழன், பூமி போன்று பல கோள்கள் தனித்தனிப் பாதையில் – தனித்தனி வட்டங்களில் -சூரியனைச் சுற்றி வருகின்றன. செவ்வாய் கோளுக்கும் அதை அடுத்த வட்டத்தில் உள்ள வியாழனுக்கும் நடுவே ஏதோ ஒரு கோள் இருந்திருக்க வேண்டும் என்றும் அது சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் ஒரு கருத்துஉள்ளது.
போடே என்ற ஜெர்மன் விஞ்ஞானி சூரியனுக்கும் பல்வேறு கோள்களுக்கும் உள்ள தூரத்தை வைத்து ஒரு “குருட்டாம் போக்கு” கணக்குப் போட்டு 1772 ஆம் ஆண்டில் மேற்படிக் கருத்தைக் கூறினார். பிறகு வானவியல் நிபுணர்கள் தொலை நோக்கி மூலம் வானை சல்லடை போட்டுத் தேடியபோது பல குட்டிக் கோள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றில் பல, சில நூறு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டவை.
இவை தவிர போடே குறிப்பிட்டுக் கூறிய சுற்றுப் பாதையில் “ஆட்டு மந்தை” போல எண்ணற்ற குட்டிக் கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்துமே சூரியனைச் சுற்றி வருபவை. இவை ஆங்கிலத்தில் அஸ்டிராய்ட்ஸ் என்று குறிப் பிடப்படுகின்றன. இந்த அஸ்டிராய்டுகளில் பல, தமது சுற்றுப் பாதையிலிருந்து விலகி பூமியின் சுற்றுப் பாதையைக் கடந்து சூரியனைச் சுற்றிச் செல்கின்றன.
சில அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகில் பூமியைக் கடந்து செல்கின்றன. சமீபத்திய கணக்குப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான அஸ்டிராய்டுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் பெயர்கள் உண்டு. ஆரம்ப நாட்களில் இவற்றைக் கண்டுபி டித்தவர்கள் விசித்திரமான பெயர்களை வைத்தனர். இப்போது சர்வதேச வானவியல் அமைப்பின் அங்கீகாரத்துடன் முதலில் எண்கள் அளிக்கப்படுகின்றன. பின்னர் பெயர் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் காவலூர் என்னுமிடத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் 1988 பிப்ரவரியில் கண்டு பிடித்த ஒரு அஸ்டிராய்டுக்கு பிரபல கணித மேதை ராமானுஜத்தின் பெயர் வைக் கப்பட்டுள்ளது.
2000 நவம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு அஸ்டிராய்ட் பெயர் வருணன். மாதம் ஒன்றுக்கு சுமார் 5000 வீதம் புதிது புதிதாக அஸ்டிராய்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் அஸ்டிராய்ட் ஒன்றினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் போலத் தோன் றினால் பூமியை எவ்விதம் காப்பாற்றுவது என்பது பற்றிப் பல திட்டங்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.