நாடாளுமன்ற புதியகட்டிடத்தின் மேற்கூரையில் வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற புதியகட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசியசின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்துவைத்தார். மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதியநாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக்கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.971 கோடி மதிப்பில் 62000 சதுர மீட்டரில் முக்கோணவடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனைதாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் இந்த கட்டிடம் அமைகிறது.

குளிர்கால கூட்டத் தொடருக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதியநாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்திலான தேசியசின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தேசிய சின்னத்தை தாங்கி பிடிப்பதற்காக 6500 கிலோ எடையில் ஸ்டீலிலான அமைப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஷ்ரம் ஜீவிகளுடன் கலந்துரை யாடினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதியநாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமும் 9.5 டன் எடையும் உடைய வெண்கலத்தில் உருவான பிரமாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...