ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதிப்பதென்று மத்திய அமைச்சரவை செவ்வாய்க் கிழமை முடிவு செய்தது.


தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் "இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புக்கு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் விரைவில்வெளியிடப்பட இருக்கிறது.


வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன்இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர்நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, நாட்டைவிட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்.


இதனிடையே, ஜாகிர் நாயக்கின் "இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' அமைப்பால் நடத்தப்படும் "பீஸ் டிவி' தொலைக் காட்சி வாயிலாக பயங்கரவாத பிரசாரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் தீவிரமாக விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதிப்பது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.


முன்னதாக, முஸ்லிம் இளைஞர்களை பயங்கர வாதத்தில் ஈடுபடுவதற்கு தூண்டியது உள்ளிட்ட குற்றச் சாட்டின் கீழ் ஜாகிர்நாயக்குக்கு எதிராக மகாராஷ்டிர மாநில போலீஸார் வழக்குகளை பதிவு செய்தனர். இதேபோல், ஜாகிர்நாயக்கால் நடத்தப்படும் கல்விதொடர்பான அறக்கட்டளைக்கு, வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகளில், ஜாகிர் நாயக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...