மத்திய சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை மந்திரி நிதின்கட்காரி இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் தேசியநெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப் படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் தற்போது 96 ஆயிரம் கிலோமீட்டர் உள்ளது. அது 2 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும். தற்போது ஒருலட்சத்து 65 ஆயிரம் கி.மீ. சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
முதலில் தேசிய நெடுஞ் சாலைகளின் நீளத்தை அதிகரிக்க முடிவுசெய்துள்ளோம். அதன்பின்னர், போக்குவரத்து நிலைமைக்கு ஏற்ப 4 வழி மற்றும் 6 வழிச் சாலையாக அவற்றை மாற்றுவதற்கு திட்ட மிட்டுள்ளோம்.
வரும் காலங்களில் சாலை விபத்துக்களில் அப்பாவிமக்கள் உயிரிழப்பதை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.