எவன் சொன்னது சிவனைத்தான் வணங்கவேண்டும் என்று சொல்லவில்லை ஆர்எஸ்எஸ் விஷ்ணுவையோ பராசக்தியையோ வணங்கு என்று சொல்லவில்லை . இந்த தேசத்தை தாயாக தெய்வமாக நினைத்து வழிபடும் தேசபக்தர்களை கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமே ஆர்எஸ்எஸ் . இந்துத்வா என்பது மதம் சார்ந்ததல்ல.
இந்த மண்ணின் பாரம்பரிய கலாச்சார வாழ்க்கை முறை இந்த மண்ணில் தோன்றியமதம் ஹிந்துமதம் மட்டுமே கிருஸ்தவமதம் நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்டது .இஸ்லாம் நம் தேசத்தின் வளங்களை கொள்ளையடிக்க வந்த முகலாயரர்களால் திணிக்கப்பட்டது.இங்கிருக்கும் கிருஸ்தர்கள் இஸ்ரேலிலிருந்தோ இங்கிலாந்திலிருந்தோ வந்தவர்களல்ல இந்த மண்ணில் பிறந்த ஹிந்துக்களே …..
ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுக்கு பயந்தே
ராமன் ராபர்ட்டாகினான்
கிருஷ்ணன் கிருஸ்டோபராகினான்
ஜெகதீசன் ஜேம்ஸ் ஆகினான் .
அதுபோலத்தான் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்திலிருந்தோ அரபு நாடுகளிலிருந்தோ வந்தவர்களல்ல.
முகலாயர்களின் வாள்முனைக்கு பயந்தே இந்த மண்ணில்பிறந்த
ரங்கன்தான் ரஹீம் ஆகினான்
கந்தன்தான் காதர் ஆகினான்.
அமாவாசைதான் அப்துல் ஆகினான்
எனவேதான் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொறு உயிரும் ஹிந்துவே என்பதில் ஆர்எஸ்எஸ் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளது.
மதத்தால் நீ
இஸ்லாமியனாக இரு
கிருஸ்தவனாக இரு
ஹிந்துவாக இரு
ஆனால் மனதால் இந்தமண்ணின் பாரம்பரிய கலாச்சாரத்தை மதிக்கும்
இந்தியனாக இரு
இதைதான் இந்துத்வா என்கிறது ஆர்எஸ்எஸ் ,
இந்த மண்ணில் பிறப்பவன். ஹிந்துவாகத்தான் பிறக்கிறான் என்பதை கிருஸ்தவமும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்வேன் அதற்கு நான் சொல்லும் காரணம் ஒரு கிருஸ்தவ தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை கிருஸ்தவனாகத்தானே இருக்கமுடியும் பின் எதற்காக ஞானஸ்தானம் (கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தல்) என்று புனிதநீர் தெளித்து அவன்கிருஸ்தவனாக மாற்றப்படவேண்டிய அவசியமென்ன?
அவர்களுக்கு தெரியும் இந்த மண்ணில் ஜனிக்கும் ஒவ்வொறு உயிரும் ஹிந்துதான் என்று ஹிந்துவாக பிறந்துதான் சுன்னத் செய்து இஸ்லாமியராகவும் ஞானஸ்தானம் கொடுத்து கிருஸ்தவராகவும் மாறுகிறார்கள்.
அடிப்படையில் அனைவரும் இந்த மண்ணில் பிறந்த ஹிந்துக்களே இதுதான் ஹிந்துத்வா என்றால் ஏன் இங்குள்ள அரசியல்வியாதிகள் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி பாமரமக்களின் மனதில் எழலாம்.
அதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு இதுதான் இந்துத்வா என்பதை அறியாதவர்களா நம் அரசியல்வியாதிகள் என்றால் இல்லை அவர்கள் அறிந்ததே ஆனால் இதுதான் இந்துத்வா என்பதை மக்களுக்கு உணர்த்தி விட்டால் திராவிடன் ஆரியன் என்று பிரித்தாளும் இவர்களின் சூழ்ச்சி இங்கு எடுபடாமல் போய்விடும்.
திராவிடம் என்னும் மாயைக்குள் மக்களை மயக்கிவைத்திருக்கும் வரைதான் தமிழன்அல்லாதவர்கள் தமிழ்நாட்டில் கோலோட்சமுடியும்.
இந்துத்வா என்னும் தேசியம் இங்குவலுப்பெற்று விட்டால் போலிமதசார்பின்மை பேசும் மதசார்பற்றமாமாக்கள் திராவிடம் என்னும் திரைக்குபின்னால் திருடமுடியாது என்பதை உணர்ந்தவர்கள்தான் இந்துத்வாவை எதிர்க்கிறார்கள் .
இந்த மண்ணில் தோன்றியமதம் ஹிந்துமதம்.
ஐம்பெரும் காப்பியங்களும் மஹாபாரதமும் ராமாயணமும் பகவத்கீதையும் இந்த மண்ணில் தோன்றியது இந்தபுண்ணியபூமியை கருவாக உயிராக கொண்டது இந்ததேசத்தின் கலாச்சாரத்தோடு தழுவி பிண்ணிபினைந்தது.
ஆனால் பைபிள் இந்த மண்ணைப்பற்றியதா இல்லை இஸ்ரேலைத்தழுவி எழுதப்பட்டது .
கிருஸ்தவ தேசங்களை கருவாக கொண்டது குரான் அரபுதேசத்தை தழுவியது.
இந்தமண்ணின் புனிதநூல் பகவத்கீதையே இந்துத்வா என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டால் பகவத்கீதையை எதிர்க்கும் எண்ணம் இங்கு தோன்றாது பாமரமக்களுக்கும் இந்துத்வா என்பதன் அர்த்தத்தை புரியும்படி கொண்டுசேர்த்தால் 2016 ல் தமிழகம் மட்டும் என்ன தரணியும் நம் காலடியில் தான்.
தேசியம் இங்கு மலரவேண்டுமென்றால் தாமரை தமிழகம் ஆளவேண்டுமென்றால் ஒவ்வொறு மூலைமுடுக்கிலும் ஆர்எஸ்எஸ் வளரவேண்டும் ஷாகா நடக்காத கிராமங்களேஶ இல்லை என்ற நிலை வரவேண்டும் அதற்கான பணியை இப்போதே முன்னெடுத்து செல்வோம்.
கழகங்கள் இல்லா தமிழகம் வெகுதூரத்தில் இல்லை நம் செயலில் தான் உள்ளது .
கடமையைச்செய்வோம் கழகங்கள் இல்லா கலாச்சார தமிழகம் காண்போம்!
* பாரத்மாதாகீ ஜே…! *
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.