பிரதமரின் உக்ரைன் பயணத்தின் பொது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் கூட்டறிக்கை

 

வ.எண் ஒப்பந்தத்தின் பெயர் குறிக்கோள்
வேளாண் மற்றும் உணவுத் தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியக் குடியரசுக்கும், உக்ரைன் அரசுக்கும் இடையே ஒப்பந்தம்.

 

தகவல் பரிமாற்றம், கூட்டு அறிவியல் ஆராய்ச்சி, அனுபவ பரிமாற்றம், வேளாண் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, கூட்டுப் பணிக் குழுக்களை உருவாக்குதல் போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகிறது.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, மற்றும் உக்ரைன் அரசின் மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைத் துறைக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

ஒழுங்குமுறை, பாதுகாப்பு மற்றும் தர அம்சங்களை மேம்படுத்துதல், முக்கியமாக தகவல் பரிமாற்றம், திறன் வளர்ப்பு, பயிலரங்குகள், பயிற்சி, பயணப் பரிமாற்றம் மூலம் மருத்துவப் பொருட்கள் மீதான ஒத்துழைப்புக்கு வழிவகை செய்கிறது.

 

உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக இந்திய மனிதாபிமான மானிய உதவி தொடர்பாக இந்தியக் குடியரசு மற்றும் உக்ரைன் அமைச்சரவை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

 

உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவி அளிப்பதற்கான கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்குகிறது. எச்.ஐ.சி.டி.பியின் கீழ் திட்டங்கள் உக்ரைன் மக்களின் நலனுக்காக உக்ரைன் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.

 

2024-2028 ஆண்டுகளுக்கான இந்திய குடியரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் உக்ரைனின் கலாச்சாரம், தகவல் கொள்கை அமைச்சகம் இடையே கலாச்சார ஒத்துழைப்பு திட்டம்.

 

நாடகம், இசை, நுண்கலைகள், இலக்கியம், நூலகம் மற்றும் அருங்காட்சியக விவகாரங்கள் ஆகிய துறைகளில் கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அத்துடன் மற்றும் தொட்டு உணரக் கூடிய மற்றும் தொட்டுணர இயலாத கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஊக்குவித்தல் உட்பட இந்தியா மற்றும் உக்ரைன் இடையே கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...