பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத்தெரிவித்தார். முன்னதாக, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பயனடை வதாகவும், அமெரிக்கா பாதிக்கப்படு வதாகவும் குற்றம்சாட்டிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில்இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், மோடி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷிய சுற்றுப்பயணத்தில் அவர், பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் வெள்ளிக்கிழமை பேசினார். ரஷிய அதிபர் புதினும் பங்கேற்ற இந்தமாநாட்டில், அமெரிக்காவை பெயர் குறிப்பிடாமல் மோடி பேசினார். அவர் கூறியதாவது:
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி, பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதிலும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதிலும் இந்தியா தொடர்ந்து உறுதியாகச் செயல்படும். ஏனெனில், இது நமது எதிர்காலத் தலை முறையை பாதிக்கும் முக்கியப் பிரச்னை. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக்கொண்ட இந்தியா, இயற்கையை பாதிக்கும் எந்த செயலுக்கும் ஆதரவு அளிக்காது.
இப்போதும்… எப்போதும்…: இப்போது மட்டுமல்ல, எப்போதுமே நான் இதைத்தான் கூறுவேன். பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்தியா மிகவும் பொறுப் புணர்வுடன் நடந்து கொள்ளும். கடந்த 2015-ஆம் ஆண்டில் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் முன்பே, சுற்றுச் சூழலை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா 5000 ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்டது. நான் குஜராத் முதல்வராக இருந்த போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது என்றார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோதும் மோடி இதேகருத்தை வலியுறுத்தினார். அப்போது, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாட்டை பின்பற்றுமா? அல்லது பாரீஸ் ஒப்பந்தத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, 'நான் எந்தவழியில் செல்வேன் என்பது ஒரு கேள்வி அல்ல. ஆனால், நிச்சயமாக பருவநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். அடுத்த தலைமுறையினர் சுவாசிக்க சுத்தமானகாற்றையும், சுகாதாரமான வாழ்வியல் சூழலையும் விட்டுச் செல்வது நமதுகடமை' என்று மோடி பதிலளித்தார்.
முன்னதாக, இந்தியாவில் முதலீடுசெய்ய அழைப்பு விடுத்து மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
120 கோடி மக்களை கொண்ட மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்கிவருகிறது. இந்தியாவில் விவசாயம் முதல் பாதுகாப்புத்துறை வரை முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மையும், சிறப்பான நீதித்துறையும் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய வானமே எல்லையாக உள்ளது.
இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால், இந்தபிரச்னை காரணமாக கடந்த 40 ஆண்டுகளில் இந்திய-சீன எல்லையில் ஒருதுப்பாக்கி தோட்டா கூட பாயவில்லை. உலக நாடுகள் ஒன்றை மற்றொன்று சார்ந்து இருக்கும் சூழ்நிலை வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி அளிப்பதைத் சுட்டி காட்டிப் பேசிய மோடி, 'பயங்கரவாதம் என்பது சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியும், ஆயுதங்களும் கிடைப்பதை முற்றிலுமாக தடுக்கவேண்டும். அவர்களின் தகவல் தொடர்புகளை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளை ஒழிக்கவேண்டும்' என்றார்.
இதனிடையே, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை தொடர்ந்துநிறைவேற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.ஐ.நா. கோரிக்கை: பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து உலக நாடுகள் விலகக்கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
'பருவநிலை மாற்றத்தைத் தடுக்கவேண்டியது மிகவும் அவசியம். உலகில் உள்ள அனைத்து நாடுகளின் இதற்காக தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பருவநிலை மாற்றம் என்பது உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது' என்று அவர் கூறியுள்ளார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.